சரிகமப - வில் பவித்ரா மகளுக்கு கிடைத்த அங்கீகாரம் - தாய் வெற்றியின் பெருமிதம்
சரிகமப Grand Finale மேடையில் போட்டியாளர் பவித்ராவின் மகளுக்கு KAG மூலமாக ஒரு சிறப்பான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சரிகமப
சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி நேற்றைய தினம் தனது 6 மாத பயணத்தை வெற்றிகரமாக முடித்து இருந்தது. இதில் இறுதிச்சுற்றுக்கு ஆறு போட்டியாளர்கள் தெரிவு செய்யபட்டிருந்தார்கள்.
இதில் ஆறாவதாக இறுதிச்சுற்குக்கு தெரிவானவர் மக்க விருப்ப வாக்கில் தெரிவான போட்டியாளராவார். இவரின் பெயர் பவித்ரா.

பல பெண்கள் பவித்ராவின் தன்னம்மிக்கையை பார்த்து தாங்களும் தங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களை கடந்து வந்ததாக மேடையில் அனைவர் முன்னிலையிலும் கூறினார்கள்.
இதன் காரணமாக சரிகமப வின் சிங்கப்பெண் பவித்ரா என அனைவராலும் தற்போது போற்றப்படுகிஙார். இந்த நிகழ்ச்சி பலரின் கனவை நனவாக்கும் நிகழ்ச்சியாக உள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இதில் தன் கணவரை சிறு வயதிலே இழந்து தன் குழந்தைக்காக போராடிய பவித்ராவின் கனவு இன்று நனவானது. அவர் குழந்தை நட்சத்ராவிற்கு KsG குழு மூலம் அந்த குழந்தை 12ம் வகுப்பு வரை படிக்ககூடிய எல்லா படிப்பிற்கும் அந்த குழு முழு பொறுப்பையும் ஏற்றது.
இது மேடைக்கு வரும் வரை 12ம் வகுப்பு வரை படிப்பு செலவை ஏற்க நினைத்த அந்த குழு மேடை ஏறிய பின்னர் மேற்படிப்பிற்கும்பவித்ராவின் குழந்தைக்கு உதவுவதாக ஒரு ஸ்கொலர்சிப் கொடுத்தது.
ஒரு தாயின் கனவாக அவர் இவ்வளவு காலமும் எதற்காக பாடு பட்டாரோ அந்த கனவு இன்று சரிகமப மேடை மூலம் நனவாகியது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |