சரிகமப -வில் கங்கை அமரன் சுற்றில் கண்ணீருடன் வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள்
சரிகமப சுற்றில் நடைபெற்று முடிந்த கங்கை அமரன் சுற்றில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர்.
சரிகமப
சரிகமபவில் கடந்த வாரம் இசையமைப்பாளர் கங்கை அமரன் சுற்றாகும். இந்த சுற்றில் போட்டியாளர்கள் அவரின் பாடல்களை பாடி அசத்தி இருந்தனர்.
இதில் பல போட்டியாளர்கள் Golden Perfomance பெற்றிருந்தனர். சிலர் பெறவில்லை. நிகழ்ச்சியில் பல சிறப்பு விருந்தினர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
சரிகமப நிகழ்ச்சியின் கடந்த சுற்றில் 26 போட்டியாளர்கள் தேர்வுசெய்யப்பட்டிருந்தனர். போட்டியின் சட்டவிதிகள் மற்றும் மதிப்பெண் கணிப்பின் அடிப்படையில், அந்த சுற்றில் 3 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்ற கங்கை அமரன் சுற்றிலும் இரு போட்டியாளர்கள் – இலங்கையைச் சேர்ந்த சினேகா மற்றும் பகவதி – அவர்கள் இதுவரை பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் போட்டியை விட்டு விலகியுள்ளனர்.
இவர்களை அரங்கில் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்திய நிலையில், மரியாதையுடன் போட்டியிலிருந்து விடைபெற அனுப்பினர். இந்தக் கட்டத்தை உணர்ச்சிப்பூர்வமான ஒன்றாக மாற்றியது அனைவரது பாராட்டையும் பெற்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |