இவர்களை பகைப்பது ஆபத்தானது! மிகவும் மோசமான எதிரியாகும் 3 ராசிகள்
பொதுவாக ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரத்தை கொண்டு அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களையும் துல்லியமாக கணித்து கூறும் பழங்கால சாஸ்திர முறையாக ஜோதிட சாஸ்திரம் அறியப்படுகின்றது.
அந்தவகையில் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் நண்பர்களாக எந்தளவுக்கு நல்லவர்களாக இருக்கின்றார்களே அதைவிட பல மடங்கு எதிரிகளுக்கு மோசமான எதிரியாகவும் இருப்பார்கள்.

அப்படி தங்களின் எதிரிகளுக்கு வாழும் போதே நரகத்தை காண்பிக்கூடிய மிகவும் ஆபத்தான ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கும்பம்

சுதந்திரமான மனப்பான்மை கொண்ட, அமைதியை விரும்பும் மற்றும் கனவு காணும் இயல்புகளை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் யாராவது தங்களுக்கு துரோகம் செய்வதாக கண்டறிந்தால் இவர்களின் மோசமான பக்கத்தை பார்க்க வேண்டியதாக இருக்கும்.
சனி பனவானின் ஆதிக்கத்தில் பிறப்பெடுத்த இவர்கள் வாழ்வில் எல்லா சூழ்நிலைகளிலும், நீதி நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். எதிலும் நியாயமாக நடந்துக்கொள்ளும் இவர்களின் பகையை சம்பாதிப்பது மிகவும் ஆபத்தானது.
அவர்களின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாக எந்த உணர்வும் அவர்களை வேறு திசையில் ஓடச் செய்யலாம், இவர்களுக்கு துரோகம் செய்தவர்களை எங்கு சென்றாலும் விடவே மாட்டார்கள்.
ரிஷபம்

அமைதி, ஆறுதல் மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசியினர் பார்ப்பவர்களை மயக்கும் அழகிய தோற்றத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களை விரும்பாதவர்கள் மிகவும் அரிது.
ஆனால் ரிஷப ராசியினரின் கோபம் மற்றும் பகை மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.
ரிஷபம், அதன் புத்திசாலித்தனம் மற்றும் தலைக்கனத்திற்கும், நிலைத்தன்மைக்கும் பெயர் பெற்ற ஒரு ராசியாகும். இவர்கள் எளிதில் யாரையும் எதிரியாக நினைக்க மாட்டார்கள். ஆனால் பகைத்துவிட்டால் மீண்டும் அவர்களின் நட்பை வாழ்வில் ஒருபோதும் எதிர்ப்பார்க்க முடியாது.
மீனம்

குழந்தைத்தனமான நடத்தை மற்றும் கற்பனை திறனுக்கு பெயர் பெற்ற மீன ராசிக்காரர்களின் அப்பாவித்தனமாக குணத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. ஆனால் இவர்களின் கோபம் மிக மிக ஆபத்தானதாக இருக்கும்.
இவர்கள் இயல்பில் எந்தளவுக்கு இரக்க குணம் கொண்டவர்களாக இருக்கின்றார்களோ, அதை விட பல மடங்கு மோசமான மற்றும் மூர்க்கத்தனமான எதிரியாகவும் மாறக்கூடியவர்களாக இருப்பார்கள்.
இவர்களை பகைப்பது நமக்கு நாமே சூனியம் வைத்துக்கொள்வதற்கு ஒப்பானது. இவர்கள் நீங்கள் எதிர்ப்பார்ப்பதை விட பல மடங்கு ஆபத்தான எதிரியாக மாறக்கூடும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |