Vj அர்ச்சனா முகத்தை பளபளபாக்கியது ABC ஜூஸ் தானாம்.. அடிக்கடி குடிக்கலாமா?
பொதுவாக பெண்கள் முகம் அழகை பராமரிப்பதில் மற்றும் மேம்படுத்துவதில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.
ஆண்களும் பெண்களுக்கு நிகராக சரும பராமரிப்பில் அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள்.
அப்படி சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்த பானம் தான் ABC ஜூஸ். இந்த ABC ஜூஸை குடித்து தன்னுடைய சருமத்தின் நிறத்தை மாற்றியதாக நடிகைகள் பேட்டிகளில் கூறியதால், அதனை அவர்களுடைய ரசிகர்கள் முயற்சி செய்தார்கள்.
அதன் பின்னர், ABC ஜூஸ் என்ன தான் சரும அழகை மேம்படுத்தினாலும், சில பாதிப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்தார்கள். தற்போது ABC ஜூஸ் பற்றிய காணொளிகள் பகிரப்படுவது குறைவாக இருந்தாலும், நடிகைகள் கொடுத்த அலப்பறையின் தாக்கம் இன்றும் இருந்து வருகிறது.
அந்த வகையில், சின்னத்திரை நடிகையும், பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னருமான Vj அர்ச்சனா கொடுத்த பேட்டியொன்றில் கொரானோ காலத்தில் வீட்டில் இருக்கும் சமயத்தில் தவறாமல் ABC ஜூஸ் குடித்து வந்ததாகவும் இது தான் அவரின் சருமத்தின் பளபளப்பிற்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அப்படி ABC ஜூஸில் என்ன இருக்கிறது என்றும், அதனை தொடர்ந்து குடிக்கும் பொழுது என்னென்ன நன்மை, தீமை இருக்கிறது என்றும் எமது பதிவில் நீங்கள் பார்க்கலாம்.
ABC ஜூஸ் குடிக்கும் பழக்கம்
- சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்ட ABC ஜூஸில் ஆப்பிள், பீட்ரூட், கேரட் சேர்த்து கொள்ளலாம். இவை இல்லாதவர்கள் ABC எழுத்தில் பெயர் துவங்கும் பழங்கள், காய்கறிகளை சேர்த்து பானம் தயாரித்து குடிக்கலாம். இந்த பானம் உங்களுடைய சருமத்தின் நிறத்தில் தாக்கம் செலுத்தி, கருமையில் இருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வரும்.
- சிலர் சிறுவயதில் பார்ப்பதற்கு வயதானவர்கள் போன்று இருப்பார்கள். அப்படியானவர்களுக்கு ABC ஜூஸ் பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனின் இந்த பானம் அடிக்கடி குடிக்கும் பொழுது வயதான அறிகுறிகள் குறையும்.

- ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் (A, C) மற்றும் நீரேற்றம் இந்த பானத்தில் நிறைந்திருக்கும். இதனால் உங்களுடைய செல்கள் புத்துணர்ச்சியடைகிறது. நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, கொலாஜன் அதிகமாக ஊக்குவிக்கப்படுகிறது. இதன் விளைவாக தான் உங்களுடைய சருமம் ஜொலிக்கிறது.
- பீட்டா கரோட்டின் வைட்டமின் A-ஆக மாற்றமடைந்து தோல்களை மீளுருவாக்கம் செய்கிறது. இதனால் தான் ABC ஜூஸ் குடிப்பவர்கள் ஜொலிக்கிறார்கள்.
- ABC ஜூஸ் முக்கிய மூன்று பொருட்களில் ஒன்றாக பார்க்கப்படும் பீட்ரூட், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, துடிதுடிப்பான தோற்றத்தை தருகிறது.
ஆபத்து நிச்சயம்

- ABC ஜூஸ் தொடர்ந்து மறக்காமல் குடிப்பவர்களுக்கு இயற்கை சர்க்கரைகள் அதிகமாக உடலுக்குள் செல்லும். இது காலப்போக்கில் நீரிழிவு நோயாளியாக உங்களை மாற்றி விடும்.
- வெள்ளையாக வேண்டும் என்ற ஆசையில் லிட்டர் கணக்கில் நீங்கள் ABC ஜூஸ் எடுத்துக் கொள்ளும் பொழுது அளவுக்கு அதிகமான நார்ச்சத்து உடலில் சேரும். இது வயிற்று வலி, வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி, உங்களின் நிலைமையை மோசமாக்கி விடும்.

- என்ன தான் பீட்ரூட் உங்களின் சருமத்திற்கு புது பொலிவுக் கொடுத்தாலும் அளவில்லாமல் எடுத்துக் கொள்ளும் பொழுது ஆக்சலேட் அளவு அதிகரிக்கும். இந்த நிலைமையால் பாதிக்கப்படுபவர்கள் சோர்வாகவும், கவலையாகவும் உணர்வார்களாம். மருந்தாகவே இருந்தாலும் அளவுடன் எடுப்பது தான் பலன் தரும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |