சுஷாந்திகா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்ட மெய்சிலிர்கும் தருணம்! வைரலாகும் காணொளி
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல இசை நிகழ்ச்சியான 'சரிகமப சீனியர் சீசன் 5 மாபெரும் இறுதிச் சுற்றுடன் நேற்றைய தினம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது.
இறுதிச் சுற்றில் சுஷாந்திகா டைட்டில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட மெய்சிலிர்கும் தருணம் அடங்கிய காணொளி தற்போது இணையத்தில் படு வைரலாகியுள்ளது.

சரிகமப சீனியர் சீசன் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப.அதன் 5 ஆவது சீசன் வெற்றிகரமாக நேற்றைய தினம் முடிவுக்கு வந்தது.
இந்த சீசன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறந்த பாடல் திறமையாளர்களை ஒன்றுகூட்டி, அவர்களுக்கு பெரிய தளம் அமைத்துக் கொடுத்தது என்றால் மிகையாகாது.

நேற்று நவம்பர் 23ஆம் திகதி நேரலை இறுதிச் சுற்றில், சுசந்திகா, சபேசன், செந்தமிழன், பவித்ரா, ஸ்ரீஹரி, மற்றும் சிவானி ஆகிய ஆறு போட்டியாளர்கள் கர்நாடகச் சங்கீதம், மெலடி, மேற்கத்திய இசை உட்பட பல்வேறு வகைகளில் பாடி அசத்தினார்கள்.

இந்நிலையில், சரிகமப சீனியர் சீசன் 5 -இல் முதல் இடம் பிடித்து டைட்டிலை வென்ற சுசாந்திகாவுக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.

இந்த மெய்சிலிர்க வைக்கும் தருணத்தின் காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |