சரிகமபா மேடைக்கு நடக்க முடியாமல் வந்த தாய்... கண்ணீரில் ஆழ்ந்த ஒட்டுமொத்த அரங்கம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமபா நிகழ்ச்சியில், சரத் சார்ஸ் அரங்கத்தில் ஒட்டுமொத்த நபரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளார்.
சரிகமப சீனியர் சீசன் 4
பிரபல ரிவியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப ஆகும். சாமானிய மக்களின் கனவுகளை நினைவாக்கும் இந்நிகழ்ச்சியால் பலரது இசை திறமைகள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சரிகமப சீனியர் சீசன் 4 ஏப்ரல் மாதம் 27ம் தேதியிலிருந்து ஆரம்பமாகியுள்ளது. சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்நிகழ்ச்சியில் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், இந்த வாரம் அர்ப்பணிப்பு சுற்று நடைபெற உள்ளது.
இதில் போட்டியாளராக கலந்து கொண்ட சரத் சார்ஸ் தனது அம்மாவிற்காக பாடல் ஒன்றினை அற்பணித்துள்ளார். மன்னன் படத்தில் “அம்மா என்று அழைக்காத“ என்ற பாடலை அசத்தியுள்ளார்.
இவர் பாடிக்கொண்டிருக்கையில் நடக்கமுடியாத இவரது தாய் அரங்கத்திற்குள் வந்துள்ளார். இதனால் அரங்கமே கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |