சரிகமப: இறுதிச்சுற்று போட்டியாளர்களுடன் பாடிய சுவேதா மோகன்! வைரலாகும் காணொளி
சரிகமப வில் Grand Finale க்கு முன்னர் இறுதிச்சுற்றுக்கு தெரிவான 6 போட்டியாளர்களுடன் பாடகி சுவேதா மோகன் இணைந்து பாடிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவேதா மோகன்
தமிழ் சினிமாவில் பிரபல பாடகியான வலம் வருபவர் தான் சுவேதா மோகன். இவர் பின்னணிப்பாடகி சுஜாதா மோகனின் மகள் ஆவர்.

பாடகி ஸ்வேதா மோகன், அஸ்வின் என்பவரை கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு அழகிய மகள் உள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தமிழை தாண்டி பல மொழிகளில் பாடல்கள் பாடி அசத்தி வந்த ஸ்வேதா மோகன் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வந்தார்.

தற்போது அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்று வருகின்றார்.
இந்நிலையில், சரிகமப சீனியர் சீசன் 5 Grand Finale க்கு முன்னர் இறுதிசுற்றுக்கு தெரிவான சுஷாந்திக்கா, ஸ்ரீகரி, சபேஷன், சின்னு, ஷிவானி, பவித்ரா ஆகிய ஆறு இறுதிச்சுற்று போட்டியாளர்களுடன் இணைந்து பாடிய காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |