உண்மையான நட்பு காதலாக மாறிய தருணம்... 7ஆண்டு தோழியை மறுமணம் செய்த சரத்குமார்
ராதிகாவுடன் பல ஆண்டுகள் நண்பர்களாக பழகி பின்னர் அவரை திருமணம் செய்துக் கொண்ட சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார் சரத்குமார்.
நடிகர் சரத்குமார்
தமிழ் சினிமாவில் கதாநாயகன், தயாரிப்பாளர், வில்லன் என பல முகங்களைக் கொண்டவர் தான் சரத்குமார். இவரின் சினிமாவில் நாட்டாமை படம் தான் இவரின் திருப்புமுனையாக அமைந்தது.
அந்தப்படத்திற்குப் பிறகு நல்ல குடும்பபாங்கான திரைப்படங்களை அதிகம் நடித்து வந்தார். சரத்குமாரின் சாயா என்பவரை முதன் முதலாக திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் பிறந்த மகள் தான் நடிகை வரலட்சுமி. குழந்தை பிறந்த கொஞ்ச காலத்திலேயே சரத்குமார் - சாயா பிரிந்து விட்டார்கள்.
ராதிகாவுடன் காதல்
முன்னதாக யூடியூப் சேனல் ஒன்று கொடுத்த நேர்காணலில் மனைவியின் நட்பு மற்றும் காதல் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் நடிகர் சரத்குமார். அதில் அவர் பேசியிருந்ததாவது,
எல்லோர் வாழ்க்கையிலும் நிறைய பாதிப்பும் வேதனையும் கண்டிப்பாக இருக்கும் ஆனால் அவற்றை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நான் நடிகனாக இருக்கும் போது என் வாழ்க்கையில் நான் சந்தித்த காதல் கதைகளை எல்லாம் ராதிகாவிடம் சொல்லியிருக்கிறேன் ஆனால் அவரே எனக்கு மனைவியாக வருவார் என்று எனக்கு தெரியாது.
நாங்கள் இருவரும் 7ஆண்டுகளாக நண்பர்களாக இருந்திருக்கிறோம். அந்த சமயத்தில் அரவிந்த சாமி கூட எங்களிடம் எனக்கு தெரியாமல் கல்யாணமா? எனக் கோபப்பட்டிருக்கிறார் அந்தளவிற்கு நாங்கள் காதலித்தது யாருக்கும் தெரியாது. நான் என் கடந்த காலத்தைப் பற்றி நிறையவே ராதிகாவிடம் திருமணத்திற்கு முன்பே கூறியிருக்கிறேன்.
உங்கள் உண்மையான காதலும் உண்மையான நட்பும் இதை ஏற்றுக் கொண்டு காம்ப்ரமைஸ் ஆகிவிடும். மேலும், என் தந்தை எனக்கு சொல்லியிருக்கிறார் திருமணமான பிறகு மனைவியின் கடந்த காலத்தை பற்றி எதுவும் கேட்க கூடாது ஏனெனில் அது என்றாவது ஒரு நாள் வார்த்தை தவறி பிரிவாக மாறிவிடும் என்று சொல்லியிருக்கிறார்.
நானும் ராதிகாவும் கடந்த காலத்தைப் பற்றிபேசிக் கொள்ள மாட்டோம். யார் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்ள மாட்டோம் என பேசியிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |