நாட்டாமை படத்தில் நடித்த போது குஷ்பு-வின் வயசு என்ன தெரியுமா?
சரத்குமார், விஜயகுமார், மனோரமா, குஷ்பு, மீனா, கவுண்டமணி, பொன்னம்பலம் என நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து அசத்திய சூப்பர் ஹிட் படம் தான் நாட்டாமை.
கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய இப்படம் 1994ம் ஆண்டு வெளிவந்தது, அந்த ஆண்டு வெளியான படங்களில் தாறுமாறாக ஓடி பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது நாட்டாமை.
நீதி, நேர்மை, பரம்பரையாக வாழ்ந்து வரும் குடும்பத்தின் சென்டிமென்ட், சண்டை, காமெடி என, சரிவிகிதத்தில் மசாலா கலந்து உருவாக்கியிருந்தார் கே.எஸ்.ரவிக்குமார்.
நாட்டாமையின் மூன்றாம் பங்காளியாக கவுண்டமணியும், செந்திலும் அடித்த கூத்துக்கள், தியேட்டரில் சிரிப்பு அலை எழ செய்தது.
இப்படத்தில் முதலில் ஹீரோவாக மம்முட்டியை அணுகியிருக்கின்றனர், அதேபோல் குஷ்பு கதாபாத்திரத்துக்கு லட்சுமியை நடிக்க அழைத்ததாகவும் தெரிகிறது.
ஆனால் ஏதோ ஒரு காரணத்துக்காக இருவரும் மறுக்க, அந்த வாய்ப்பு சரத்குமார்- குஷ்புவுக்கு கிடைத்துள்ளது.
அப்படத்தில் நடித்த போது குஷ்பு-க்கு வெறும் 24 வயது தானாம், 24 வயதிலேயே மிக பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் குஷ்பு.
மிக வயதான தோற்றத்திலும் அச்சு அசலாக பொருந்தி இன்று வரைகூட மறக்கமுடியாத கதாபாத்திரமாக மெருகேற்றிவிட்டார் குஷ்பு என்று தான் சொல்ல வேண்டும்!!!