நக்மாவிடம் காதல் வயப்பட்ட சரத்குமார்! சொகுசு பங்களா வாங்கிய கதை உங்களுக்கு தெரியுமா?
நடிகர் சரத்குமாரின் முன்னாள் காதல் பற்றிய பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார் பிரபல பத்திரிகையாளார் செய்யாறு பாலு.
சரத்குமாரின் வாழ்க்கை
தமிழ் சினிமாவில் கதாநாயகன், தயாரிப்பாளர், வில்லன் என பல முகங்களைக் கொண்டவர் தான் சரத்குமார். இவரின் சினிமாவில் நாட்டாமை படம் தான் இவரின் திருப்புமுனையாக அமைந்தது.
அந்தப்படத்திற்குப் பிறகு நல்ல குடும்பபாங்கான திரைப்படங்களை அதிகம் நடித்து வந்தார். சரத்குமாரின் சாயா என்பவரை முதன் முதலாக திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் பிறந்த மகள் தான் நடிகை வரலட்சுமி. குழந்தை பிறந்த கொஞ்ச காலத்திலேயே சரத்குமார் - சாயா பிரிந்து விட்டார்கள்.
பின்னர் தேவயாணியையும் காதலித்ததாகவும் அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்ததாகவும் பல தகவல்கள் வெளியாகியிருந்தது.
நக்மாவுடன் காதல்
தேவயாணி காதலுக்கு மறுப்புத் தெரிவிக்கவே சரத்குமார் காதலிக்க ஆரம்பித்திருக்கிறார். நக்மாவும் சரத்குமாரின் காதலை ஏற்றுக் கொண்டு இருவரும் காதலிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழந்திருக்கிறார். இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக சென்று வருவார்கள். நக்மாவை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார்.
மேலும், நக்மாவிற்காக ஈசிஆரில் ஒரு பெரிய பங்களா வாங்கி கொடுத்ததாகவும் அதன் காரணமாக அவர் தனது குடும்பத்தை பார்க்க பெங்களூருக்கு செல்வதை தவிர்த்து வந்ததாகவும் செய்திகள் பரவி வந்தன.
காப்பாற்றிய ராதிகா
நக்மாவிற்குப் பின்னர் தான் ராதிகாவுடன் சில படங்களில் நடிக்க ஆரம்பித்த சரத்குமார் ராதிகாவுடன் பல செய்திகளில் கிசு கிசு செய்திகளில் பேசத் தொடங்கினார்.
இந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளும் அளவிற்கு போய் விட்டார்கள். அப்போது பலப் பிரச்சினைகளில் சிக்கித் தவித்த சரத்குமாருக்கு பக்கபலமாக நின்று உதவி காப்பாற்றியிருக்கிறார்.
அதன்பின்னர் தான் ராதிகாவை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து முதல் மனைவியின் சம்மந்தத்துடன் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.