71 வயதில் சரத்குமாருக்கு இப்படி ஒரு ஆசையா? அவரே பகிர்ந்த விடயம்!
நடிகர் சரத்குமார் Dude திரைப்பட வெற்றி விழாவில் தனது அடுத்த ஆசை என்ன என்பது குறித்து வெளிப்படையாக பகிர்ந்துக்கொண்ட விடயம் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
நடிகர் சரத்குமார்
தென்னிந்திய சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்படும் சரத்குமார் 71வயதை கடந்த பிறகும் அதே இளமையோடு இருக்கிறார்.

அதோடு பிட்னஸிலும் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகின்றார். தென்னிந்திய சினிமாவில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் இவர் தனது திரை வாழ்க்கையில் இதுவரை 150 படத்திற்கும் மேல் நடித்துள்ளார்.

சமீபத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான 3 பிஹெச் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இவர் நடிப்பில் dude திரைப்படம் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகின்றது.
ஓபன் டாக்
இந்நிலையில், படத்தின் வெற்றி விழாவில் நடிகர் சரத்குமார் பேசிய விஷயம் இணையத்தில் தற்போது படு வைரலாகி வருகிறது.

அதில் சரத்குமார் குறிப்பிடுகையில், " இந்தப் படத்திலிருந்து எல்லோரும் என்னை டியூட் என்று அழைக்க தொடங்கியிருக்கிறார்கள்.
ஐஸ்வர்யா ராய்க்கே கணவனாக நடித்துவிட்டேன். அடுத்ததாக தீபிகா படுகோனேவுக்கு ஜோடியாக நான் நடிக்க வேண்டும். தயாரிப்பாளர்களிடம் இப்போதே கேட்டுக்கொண்டால்தான் உண்டு.

யாரும் பொறாமைப்பட வேண்டாம்" என நகைச்சுவையாக கூறியுள்ளார். குறித்த விடயம் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் கவனம்பெற்று வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |