முதல் மனைவியை விவகாரத்து செய்து விட்டேன், ஆனால்... பல வருடங்களுக்கு பின் சரத்குமார்
“முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டேன். ஆனாலும்....” முதல் முறையாக தன்னுடைய முதல் மனைவி குறித்து சரத்குமார் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
சரத்குமார்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் சரத்குமார்.
இவர் அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடி பில்டர் என பன் முகங்களை கொண்டவர்.
இருந்தாலும் சினிமா என பார்க்கும் பொழுது 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் சரத்குமார் தமிழ் மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார் மற்றும் இவர் முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் ஆவார்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான “வாரிசு” திரைப்படத்தில் விஜயிற்கு அப்பாவாக நடித்திருப்பார்.
விவாகரத்து
இந்த நிலையில் தற்போது இரண்டாவது மனைவி ராதிகாவுடன் வாழ்ந்து வரும் சரத்குமார் பேட்டியொன்றில் தன்னுடைய முதல் மனைவி குறித்து நெகிழ்ச்சியான சில விடயங்களை பகிர்ந்துள்ளார்.
அதாவது, சரத்குமார் 1984 ஆம் ஆண்டு சாயாதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வரலட்க்ஷிமி சரத்குமார், பூஜா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
சந்தோசமாக சென்றுக் கொண்டிருந்த வாழ்க்கையில் 2000 ஆம் ஆண்டு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் விவாகரத்து செய்து கொண்டனர்.
பின்னர் 2001 ஆம் ஆண்டில் நடிகை ராதிகாவை சரத்குமார் மறுமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு தற்போது மகன் ஒருவரும் இருக்கிறார்.
முதல் மனைவி குறித்தான பகிர்வு
இப்படியொரு நிலையில் சரத்குமார், தன்னுடைய முதல் மனைவி குறித்து சில விடயங்களை பகிர்ந்துள்ளார்.
“ சில பல காரணங்களால் நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். ஆனால் பொது நிகழ்ச்சிகளில் இருவரும் கலந்து கொண்டு நல்ல நண்பர்களாக பயணித்து கொண்டிருக்கிறோம்.
ஆரம்பத்தில் ராதிகாவிற்கு வரலட்க்ஷிமிக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால் தற்போது அவர்களும் நண்பர்களாகி விட்டனர் என தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |