நீரிழிவு நோய் உள்ளவர்கள் சப்போட்டா சாப்பிட்டா ஆபத்து… தொடக்கூட வேண்டாம்!
பலர் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று சப்போட்டா. சப்போட்டா பழுப்பு நிற சதைப்பற்றை கொண்டிருக்கும்.
சப்போட்டா பழமானது இந்தியா, பாக்கித்தான், மற்றும் மெக்சிக்கோவில் மிகுதியாக விளையக்கூடியது. இதில் குண்டுசப்போட்டா, வால்சப்போட்டா என வகைகள் உண்டு.
சப்போட்டாவில் என்னென்ன சத்துக்கள் உண்டு என்று பார்க்கலாம்.
பூண்டு கண்திருஷ்டியை போக்குமா? இத்தனை நாள் தெரியாமல் போச்சே! வைரலாகும் புகைப்படம்
குவிந்து கிடக்கும் சத்துக்கள்
- புரதம் 1.0 கிராம்
- கொழுப்பு 0.9 கிராம்
- நார்ப்பொருள் 2.6 கிராம்
- மாவுப்பொருள் 21.4 கிராம்
- கால்சியம் 2.1 மில்லி கிராம்
- பாஸ்பரஸ் 27.0 மி.கி
- இரும்புச் சத்து 2.0 மி.கி
- தரோட்டின் 97 மைக்ரோகிராம்
- ரைபோஃபிளோவின் 0.03 மி.கி
- நியாசின் 0.02 மி.கி
- வைட்டமின் சி 6.1 மி.கி.
அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? ஆபத்தான பிரச்சினை இருக்குமாம் ஜாக்கிரதை
இத்தகைய சத்துக்களை கொண்ட சப்போட்ட பழத்தினை தினமும் சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இனி தொடர்ந்தும் பார்க்கலாம்.
சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை.
- சப்போட்டா இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும்.
- கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும்.
- தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும்.
- இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு.
- சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.
- சப்போட்டா பழக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மையது.
- தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான நித்திரைதான்.
- ஆரம்பநிலை காசநோய் உள்ளவர்கள் சப்போட்டா பழக்கூழ் குடித்து, ஒரு நேந்திரன் பழமும் தின்று வர, காசநோய் குணமாகும்.
- சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது.
- இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும்.
- சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.
- சப்போட்டா பழத்தில் உள்ள அதிக அளவு பால் தன்மையால், பல் துவாரங்களை நிரப்பும் ஒரு கச்சா பொருளாகப் பயன்படுத்தலாம்.
கொட்டாவி விடுகையில் கண்களில் நீர் கசிவது எதனால் தெரியுமா?
கர்ப்பிணிகள் சாப்பிடலாமா?
நிச்சயமாக கர்ப்பிணி பெண்கள் சப்போட்டா பழத்தினை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
சப்போட்டாவில் எலக்ட்ரோலைட்டுகள், வைட்டமின் ஏ மற்றும் கார்போ ஹைட்ரேட்டுகளால் நிரப்பபட்டுள்ளது.
இது கர்ப்பிணிகளின் காலை சோர்வை போக்க உதவும்.
திடீரென்று திரண்டு வந்த அலைகள்.....அடுத்த நொடியே காத்திருந்த ஆச்சரியம்!
குறிப்பாக தலைச்சுற்றல் பிரச்சனையை கொண்டிருந்தால் அதன் அறிகுறி குறைக்க செய்யும். பிரசவத்துக்கு பிந்தைய தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கும் சப்போட்டா முழுமையான நன்மையை செய்யக்கூடும்.
இது கொலாஜன் உற்பத்தியிலும் பங்கு வகிப்பதால் கர்ப்பிணியின் வயிற்று தழும்புகளை குறைக்கவும் உதவக்கூடும்.
இதில் ஒன்றை தேநீருடன் சேர்த்து சாப்பிடுங்கள்.. நன்மைகள் ஏராளம்!
உடனடி ஆற்றல்லுக்கு என்ன செய்ய வேண்டும்?
சப்போட்டா பழத்தில் இயற்கையாகவே பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் உள்ளடக்கம் உண்டு.
இது உடலுக்கு அதிக ஆற்றலை கொடுக்கும்.
நாள் முழுக்க சோர்வில்லாமல் குறிப்பாக உடனடியாக உங்களுக்கு ஆற்றல் தேவை என்றால் நீங்கள் ஒரு டம்ளர் சப்போட்டா சாறு அல்லது கிண்ணம் நிறைய சப்போட்டா துண்டுகளை எடுத்துகொள்ளலாம்.
அதிகமா முடி கொட்டுதா?
சப்போட்டா விதையின் எண்ணெய் உச்சந்தலைக்கு ஊட்டம் அளித்து, எரிச்சலூட்டும் ஸ்கால்ப்பிற்கு நிவாரணமளித்து.
ஆரோக்கியமான முடி வளர்ச்சியைக் கொடுக்கிறது.
மேலும் இந்த எண்ணெய் சரும அழற்சி காரணமாக தலைமுடி உதிர்வதற்கு சிகிச்சையளிப்பதிலும் திறன்மிக்கதாக செயல்படுகிறது. எனவே அதிகமாக முடி உதிர்தல் பிரச்சினைகளை சந்தித்து வருபவர்கள் சப்போட்டா விதையின் எண்ணெய்யை வாங்கி பயன்படுத்துங்கள்.
இரவில் தூக்கம் வர இதனை செய்தால் போதும்
அப்படி இல்லாவிட்டால், சப்போட்டா விதைகளை பேஸ்ட் செய்து, அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, பின்பு இதனை இரவில் படுக்கும் போது ஸ்கால்ப்பில் படும்படி நன்றாக தேய்க்கவும்.பிறகு மறுநாள் காலையில் தலைமுடியை நன்றாக அலசவும். இது தலைமுடியை மென்மையாக்கச் செய்து, பொடுகுப் பிரச்சனைக் கூட கட்டுப்படுத்த உதவுகிறது.
எப்படி எடை இழப்புக்கு உதவுகின்றது
எடை குறைக்க விரும்புபவர்களுக்கு மிக அற்புதமான உணவு சப்போட்டா பழம்.
சப்போட்டா பழம் மறைமுகமாக எடை இழப்புக்கு உதவுகிறது.
இரைப்பையில் நொதிகளின் சுரப்பைக் கட்டுப்படுத்தி, உடல் பருமன் ஆவதைத் தடுக்கிறது.
சர்க்கரை நோயாளிகளே எச்சரிக்கை!
தற்போது நம் வாழ்க்கை முறை மாறிவிட்ட சூழலில் உடல் உழைப்பும் இன்றி இருப்பதால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
அதிலும் குறிப்பாக சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய் தான் தற்போது மக்களிடையே அதிக அளவில் காணப்படுகிறது.
சப்போட்டா பழத்தில் அதிகளவு சர்க்கரை நிறைந்துள்ளது. இது மிகவும் இனிப்பான பழம்.
ஒவ்வொரு 100 கிராம் கொண்ட ஒரு சப்போட்டா பழத்தில் 7 கிராம் சர்க்கரை உள்ளது.
பழத்தின் கிளைசெமிக் குறியீட்டு மதிப்பு (ஜி.ஐ) அதிகமாக உள்ளது. அத்துடன் அதிக சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் ஆகியவை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு சப்போட்டா பழம் மிகவும் தீங்கு விளைவிக்கும். எனவே நீரிழிவு நோயாளிகள் சப்போட்டா சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.
தப்பி தவறி கூட பலாப்பழம் உண்ட பின் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..!
முடிவு
சப்போட்டா பழத்தில் பலதரப்பட்ட சத்துக்கள் நிறைந்துக் காணப்படுவதால் தினமும் அளவுடன் எடுத்து கொள்ளுவது உடலுக்கு ஆரோக்கியமானது. நீரிழிவு நோயாளிகள் மருத்துவ ஆலோசனைகளுடன் அளவாக சப்போட்டா பழத்தினை சாப்பிடலாம்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட விஷமே. அளவாக சாப்பிட்டு அனைத்து நன்மைகளையும் பெற்று கொள்ளுங்கள்.