கொட்டாவி விடுகையில் கண்களில் நீர் கசிவது எதனால் தெரியுமா?
ஒருவருக்கு கொட்டாவி வருவது என்றால் அதற்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் உண்டு. ஆனால் நீங்கள் கொட்டாவி விடும்போது கண்களில் நீர் கசிவது ஏன் என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
முதலில் கொட்டாவி வர காரணமே நம் உடல் நிலை மிகவும் சோர்வாக இருப்பதால் தான். உடலுக்கு தேவையான ஆக்சிஜன் மெதுவாக கிடைப்பதால், மூச்சுவிடுவது மெதுவாக இருக்கும்.
இந்த கொட்டாவி மூலம் அதிகப்படியான ஆக்சிஜன் உடலுக்கு கிடைப்பதுடன், இரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கார்பன்-டை-ஆக்சைடு உடலில் இருந்து வெளியேறும்.
பூண்டு கண்திருஷ்டியை போக்குமா? இத்தனை நாள் தெரியாமல் போச்சே!
நீர் கசிவது ஏன்?
கொட்டாவி விடுகையில் கண்களில் நீர் கசியும், காரணம் அதிகப்படியான அழுத்தம் காரணமாக கண்ணீர் சுரப்பிகள் தூண்டப்பட்டு கண்கள் மேற்பகுதியின் ஓரத்தில் நீர் வருகிறது. நிறைய தண்ணீர் குடிப்பதால் இவை வருவதில்லை.
எனவே, தண்ணீர் குடிப்பதை நிறுத்த வேண்டாம். மேலும், கொட்டாவி விடும்போது கண்களை இறுக்கி மூடுவதால் கண்ணீர் சுரப்பிகள் அழுத்தம் ஏற்பட்டு கண்களின் ஓரத்தில் நீர் கசிகிறது.
இதனால் தீங்கு ஏற்படாது. இது உங்கள் கண்களை வறண்டு போவதில் இருந்து பாதுகாக்கின்றது.