பூண்டு கண்திருஷ்டியை போக்குமா? இத்தனை நாள் தெரியாமல் போச்சே! வைரலாகும் புகைப்படம்
வெயில் காலத்தில் எலுமிச்சையின் விலை உச்சம் தொட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் அதே வேகத்தில் எலுமிச்சையின் விலையும் அதிகரித்து வருகிறது. தற்போது இந்த விலைவாசி உயர்வால், சமூக வலைதளங்களில் எலுமிச்சம்பழம் பற்றித் தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
கண் திருஷ்டி
கண் திருஷ்டிக்காக எலுமிச்சம்பழம் மற்றும் பச்சை மிளகாயைத் கோர்த்து தொங்கவிடுவதை நீங்கள் வாகனங்களில் மற்றும் பிற இடங்களில் பார்த்திருக்க கூடும்.
ஆனால் இப்போது விலைகள் மிகவும் அதிகரித்துவிட்ட நிலையில், என்ன செய்ய வேண்டும்? மாற்று வழி கண்டுபிடிக்க வேண்டும். இதை மனதில் வைத்து ஒருவர், எலுமிச்சைக்கு பதிலாக பூண்டு மற்றும் மிளகாயை தொங்கவிட்டுள்ள காட்சி மிகவும் வைரலாகி வருகிறது.
கண்ணம்மாவின் புதிய அவதாரம்! பயங்கர அதிர்ச்சியில் பாரதி: திருப்பத்துடன் புதிய ப்ரொமோ
பூண்டு திருஷ்டியை போக்குமா?
எலுமிச்சம்பழத்திற்கு பதிலாக பூண்டு பயன்படுத்துவது தற்போது சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது.
இந்த வேடிக்கையான புகைப்படத்தை ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளார். இதனுடன் வேடிக்கையான தலைப்பையும் கொடுத்துள்ளார்.
அவரது தலைப்பில், 'பணவீக்கம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, எலுமிச்சை இல்லாததால் பூண்டு டெப்யூடேஷனில் வைக்கப்பட்டது. பூண்டு இன்று இந்த வேலைக்கு பொறுப்பேற்றுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரியின் இந்த பதிவை மக்கள் மிகவும் ரசித்து ஷேர் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த பதிவில் வேடிக்கையான கருத்துக்களையும் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
बढती मंहगाई को देखते हुए नींबू की अनुपस्थिति में लहसुन को प्रतिनियुक्ति पर लगाया गया?। लहसुन ने आज कार्यभार ग्रहण किया। pic.twitter.com/rmb25w45FL
— Rupin Sharma (@rupin1992) April 14, 2022