ஆட்டிப்படைக்கும் ஏழரை சனி காலத்தில் திருமணம் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?
ஏழரை சனி காலம் என்பது மனிதர்களுக்கு பல அனுபவங்களை கற்றுக்கொடுக்கும் காலம்.
சனிபகவான் ஏழரை ஆண்டுகள் ஒருவருக்கு பலவித கஷ்டங்களை கொடுத்து வாழ்க்கை பாடத்தை புரிய வைப்பார்.
ஏழரை சனி காலத்தில் திருமணம் செய்தால் என்ன நடக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
66 வயதில் தன்னை விட 28 வயது குறைவான பெண்ணுடன் 2 வது திருமணம்!
ஏழரை சனி
கும்ப ராசியில் சனிபகவான் இப்போது ஆட்சி பெற்று பயணம் செய்கிறார்.
சனிபகவானின் பார்வை மேஷம், சிம்மம், விருச்சிகம் ராசிகளின் மீது விழுகிறது.
இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க! சிறுநீரக கோளாறு ஏற்படும் ஜாக்கிரதை
மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் செய்யலாமா? ஏழரைச் சனியால் திருமணம் தடைபடுமா?' என்பது பலரது சந்தேகமாக இருக்கிறது.
ஏழரைச் சனிக்கும், மனித வாழ்விற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. சனி பகவான் கொடுப்பதை தடை செய்யும் அதிகாரம், வேறு எந்த கிரகத்திற்கும் கிடையாது.
30 ஆண்டுகளுக்குப் பின் கும்ப சனி
சனி கிரகம் ஒரு ராசியை கடக்க ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் ஆகிறது .
ராசி சக்கரத்தை ஒரு சுற்று சுற்றி வர, தோராயமாக 30 ஆண்டுகள் ஆகிறது. அதனால் பெரியவர்கள் பேச்சு வழக்கில் 30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை.
30 வருடம் தாழ்ந்தவரும் இல்லை என்பார்கள். இது சனிபகவானின் சஞ்சாரத்தை வைத்தே சொல்கின்றனர். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்கிறார்.
திருமண கோலத்தில் தேவைதையாய் வந்த பெண்... மகனை கட்டியனைக்க முடியாது துடி துடித்த காட்சி
திருமணம் செய்யலாமா?
பலருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் போன்ற பல்வேறு சுப விஷயங்கள் நடைபெறுவது ஏழரைச் சனியின் காலத்தில்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.
பல வருடங்களாக தடைபடும் திருமணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல சுப நிகழ்வுகள், சனியின் பிடியில் இருக்கும்போது எந்த தடையும் இன்றி எளிமையாக நடந்து முடிந்துவிடும்.
சராசரியாக பெண்களுக்கு 21 வயதிலும், ஆண்களுக்கு 23 வயதிலும் திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுக, போகங்களை அனுபவிக்கும் பாக்கியம் ஆரம்பமாகும்.
திருமணம் என்ற பந்தத்தில் ஆண், பெண் இருவரின் கர்ம வினைகளும் கலந்து பூர்வ புண்ணிய, பாக்கிய ஸ்தானங்கள் முழுமையாக இயங்கும்.
ஒரு ஆணுக்கு ஏழரைச் சனி நடைபெறும் காலகட்டத்தில், அவருக்கு குடும்பம் என்றால் என்ன? மனைவி - குழந்தைகளுக்கு ஒரு மனிதன் நிறைவேற்ற கடமைகள் என்ன? உழைப்பின் அவசியம் உழைப்பால் உயரும் நெறி முறை போன்ற பல்வேறு வாழ்க்கை தத்துவத்தை சனி பகவான் புரிய வைப்பார்.
அதே போல் பெண்களுக்கு கணவர் மற்றும் புகுந்த வீட்டாருடன் எப்படி அனுசரித்து வாழ்வது? கணவனின் பொருளாதாரத்தில் எப்படி குடும்பம் நடத்த வேண்டும்? குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது போன்ற இல்வாழ்க்கை உண்மைகளை புரிய வைப்பார். எனவே பாவம் செய்தவர்களுக்கு ஏழரை சனி காலத்தில்