சனிபகவானையே கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா?
இந்து மத நம்பிக்கைகளின் அடிப்படையில், சனிபகவான் நீதியின் கடவுளாக திகழ்கின்றார். அவர் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப வாழும் காலத்திலேயே அதற்கான பலன்களை பாரபட்சம் இன்றி கொடுத்துவிடுவார்.
அதனால் தான் ஜோதிட சாஸ்திரத்திலும் சனி பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சனியின் ஆசி பிறப்பிலேயே இருக்குமாம்.
இந்த ராசியினர் மீது சனியின் தீய பார்வை பட்டாலும், அவர்களை பெரியளவில் பாதிப்படைய செய்யாது.

அப்படி12 ராசிகளில் சனி பகவானுக்கு மிகவும் பிரியமான ராசிகளாக அடையாளப்படுத்தப்படும், சனியின் ஆசியை பெற்ற ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சனியின் ஆசி பெற்ற ராசிகள்

ரிஷபம்: அழகு மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசியினருக்கு பிறப்பிலேயே சனிபகவானின் ஆசீர்வாதம் இருக்கும். அதனால் இவர்கள் வாழ்க்கையில் செல்வ செழிப்புடன் இருப்பார்கள். இவர்கள் மீது சனியின் தீய பார்வையின் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும்.
துலாம்: இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு எப்போதும் சனியின் இரக்கம் இருக்கம். அதனால் உயர் பதவியில் இருக்கும் வாய்ப்பை பெறுவார்கள். சனியின் விருப்பத்துக்குரிய ராசிகளில் ஒன்றாக திகழும் இவர்களுக்கு சனியின் ஆசியால் வாழ்க்கை முழுவதும் வெற்றிகளுக்கும் செல்வ செழிப்புக்கும் பஞ்சமே இருக்காது.
மகரம்: இந்த ராசியினர் சனி பனவானின் ஆதிக்கத்தில் பிறப்பெடுத்தவர்கள் என்பதால், இயல்பாகவே இவர்களுக்கு சனி பனவானின் நீதி சார்ந்த குணங்கள் இருக்கும். நீதி நேர்மை கொண்டவர்களின் மீது சனிபகவான் தனது கனிவான பார்வையையும் ஆசியையும் வழங்குவார். அதனால் இவர்கள் வாழ்வில் சனியின் கோர பார்வையின் தாக்கம், துன்பம் இருக்காது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |