இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க! சிறுநீரக கோளாறு ஏற்படும் ஜாக்கிரதை
இந்த காலக்கட்டத்தில் வயது வித்தியாசமின்றி பலருக்கும் சிறுநீரக கோளாறு ஏற்படுகின்றது.
சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் நாம் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களும், உணவுப் பொருட்களும் தான். சிறுநீரகங்கள் உடலில பல்வேறு செயல்களை செய்கிறது.
அதில் ஹார்மோன்களை உற்பத்தி செய்வது, இரத்தத்தை சுத்திகரிப்பது, கனிமச்சத்துக்களை உறிஞ்சுவது, சிறுநீரைப் பிரிப்பது, உடலின் அல்கலைன் அமிலத்தை சீராக பராமரிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
ஆபத்தை விளைவிக்கும் சோடா
சோடா அதிகம் குடித்து வந்தால், அது சிறுநீரகங்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி பெரிதும் உதவியாக இருக்கும். உடற்பயிற்சி செய்வதால் சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரகத்தில் கால்சியம் அதிகம் தேங்கி, சிறுநீரக கற்கள் ஏற்படும். ஆகவே இவற்றைத் தவிர்க்க காய்கறிகள், பீன்ஸ், நட்ஸ், அவகேடோ போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வர வேண்டும்.
இரவு நேரத்தில் தான் சிறுநீரக திசுக்கள் புதுப்பிக்கப்படும். அப்போது சரியான தூக்கத்தை மேற்கொள்ளதால் இருந்தால், சிறுநீரகமானது நேரடியாக பாதிக்கப்படும்.
அட்சய திருதியையில் அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 4 ராசி்கள்! எந்த நேரம் தங்கம் வாங்கலாம்?
தண்ணீர் அவசியம்
தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால், சிறுநீரக இயக்கம் பாதிக்கப்படும். நீங்கள் தினமும் சரியான அளவில் தண்ணீர் குடித்து வருகிறீர்கள் என்பதை சிறுநீர் கொண்டு கண்டுபிடிக்கலாம். உங்களின் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளிவந்தால், நீங்கள் தினமும் சரியான அளவில் தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
சிறுநீரை அடக்கி வந்தால், சிறுநீர்ப்பையின் அழுத்தம் அதிகரித்து, அதனால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதோடு, சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுவிடும். ஆகவே சிறுநீர் வந்தால் அதனை அடக்காமல் உடனே வெளியேற்றிவிடுங்கள்.
உடலுக்கு உப்பு மிகவும் இன்றியமையாதது தான். ஆனால் அந்த உப்பு அளவுக்கு அதிகமானால், அது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, சிறுநீரகத்தில் அழுத்தத்தை அதிகமாக்கும்.
வலி நிவாரணி மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டால், அது முதலில் சிறுநீரகத்திற்கு தான் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.