66 வயதில் தன்னை விட 28 வயது குறைவான பெண்ணுடன் 2 வது திருமணம்! யார் இந்த கிரிக்கெட் வீரர்?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அருண் லால், தன்னை விட 28 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
மேற்குவங்க ரஞ்சி அணியின் பயிற்சியாளராக உள்ள அருண் லால்(66), அவரது தோழி புல் புல் சஹா (38) இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் 24ஆம் திகதி இருவருக்கும் நிச்சயம் நடந்துள்ளது.
அசிங்கப்பட்ட பிரியங்கா.... அதிர்ச்சியில் உறைந்த கோபிநாத்!
இந்நிலையில் இருவருக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.
இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், கேக் வெட்டித் திருமணத்தைக் கொண்டாடியுள்ளனர்.
யார் இந்த அருண் லால்?
கடந்த 1982-ம் ஆண்டு ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியில் அருண் லால் அறிமுகமானவர்.
பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் கடந்த 1955ஆம் ஆண்டு பிறந்த இவர், 1978ஆம் ஆண்டு தேயிலை நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக கொல்கத்தா வந்துள்ளார்.
வனிதா வீட்டில் நடந்த விசேஷம்! புடவையில் அடையாளம் தெரியாத அழகில் மகள்
பணியுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி அருண் லால் இந்திய அணிக்காக 16 டெஸ்ட், 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 1996-ம் ஆண்டு அனைத்து வகை கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
ஓய்வை தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் வர்ணணையாளராக பணியாற்றிய அருண்லால்க்கு கடந்த 2016-ம் ஆண்டு தாடை புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.
அதன்பிறகு வர்ணணையில் இருந்து விலகிய அவர், புற்றுநோயில் இருந்து மீண்டு வந்து தற்போது பெங்கால் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.
இந்த நிலையில் இவரது திருமண நிகழ்ச்சி சமூகவலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.