பார்வை மாற்றும் சனி - ராஜயோகத்தை அள்ளும் ராசிகள்... உங்க ராசியும் இருக்கா?
மார்ச் 21 அன்று, சனி பகவான் உத்தரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் பெயர்ச்சி அடைந்தார். வரும் ஏப்ரல் 17 வரை சனி இதே நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார்.

பார்வை மாற்றும் சனி
மார்ச் 21 நேற்று மாலை 4:00 மணியளவில், சனி கிரகம் உத்தரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் இடம்மாற்றம் செய்துள்ளார்.
இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை சனி பகவானே ஆவார். சனி கிரகம் வரும் ஏப்ரல் 17 வரை இந்த பெயர்ச்சியிலேயே இருப்பார். இது பல ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆனால் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு இந்த சனி நட்சத்திர பெயர்ச்சி நல்லவற்றை மட்டும் கொண்டு வரும்.
இவற்றுள், ஒரு சில ராசியினர் சனியின் 'ஏழரைச் சனி' காலத்தை கடந்து வருகின்றனர். மற்ற இரு ராசியினர் சனியின் 'அஷ்டமச் சனி' மற்றும் 'அர்த்தாஷ்டம சனி' ஆதிக்கத்தில் உள்ளனர்.
இதனால் இந்த பெயர்ச்சி மேஷம் மற்றும் தனுசு ராசிகளுக்கு பல நன்மைகளை அள்ளி கொண்டு வரும். எனவே ராஜயோகம் கிடைக்கும் ராசிகள் பற்றி பார்க்கலாம்.

மேஷம்
- ஏழரை சனி காலத்தை கடந்து வரும் மேஷ ராசிக்காரர்கள் தொழில், வேலைவாய்ப்பு மற்றும் சொந்தத் தொழிலைத் தொடங்குவதில் நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.
- மன அழுத்தம் குறையும் மற்றும் புதிய வாய்ப்புகள் உருவாகும்.
- தற்போது இருக்கும் வேலையை விட்டு விலகி, சொந்தத் தொழிலைத் தொடங்கத் திட்டமிடுபவர்களுக்கு இந்தக் காலகட்டம் மிகவும் சாதகமாக அமையும்.
- மன அழுத்ததில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள்.
சிம்மம்
- சனி பகவானின் இரண்டரை ஆண்டுப் பெயர்ச்சி தற்போது சிம்ம ராசியினரைப் பாதிக்கும் என கூறப்படகின்றது.
- ஆனால் சனி பகவான் 'உத்திரட்டாதி' நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் பிரவேசித்துள்ளதால் உங்களுக்கு இந்த பெயர்ச்சி சுப பலன்களை கொடுக்குமாம்.
- இரண்டரை ஆண்டுப் பெயர்ச்சியில் உள்ள சிம்ம ராசிக்காரர்கள் பொருளாதார முன்னேற்றம், வணிக ஒப்பந்தங்கள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களுடன் உறவுகள் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
தனுசு
- தனுசு ராசிக்காரர்களுக்கு தற்போது அர்த்தாஷ்டம சனி தாக்கம் இருந்து வருகிறது.
- அர்த்தாஷ்டம சனி தாக்கத்தில் உள்ள தனுசு ராசிக்காரர்கள் புதிய முதலீட்டு வாய்ப்புகள், நண்பர்களின் உதவி, குடும்ப உறவுகளில் வலுப்பாடு மற்றும் வாழ்க்கைத் துணையிடமிருந்து ஆதரவு பெறுவீர்கள்.
- மேலும் நினைத்த தடைபட்ட பல காரியங்கள் வெற்றியில் முடியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).