சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் சிக்கலில் சிக்கப்போகும் ராசிகள் - உங்க ராசி இருக்கா?
2026ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி நிகழ்ந்துள்ள நிலையில் இது நன்மையை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு தீமைகளையும் கொடுக்கிறது அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.

சனி நட்சத்திர பெயர்ச்சி
நவகிரகங்களிலேயே மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனி தான். சனியின் ஒவ்வொரு பெயர்ச்சியும் அனைத்து ராசிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என ஜோதிடத்தில் கூறப்படுகின்றது.
மார்ச் 6ஆம் தேதி சனி கும்பத்தில் இருந்து மீனத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். மேலும் மார்ச் 21-ஆம் தேதி சனி பகவான் தனது நட்சத்திர பாதையை மாற்றுவார்.
சனி பகவான், 'உத்திரட்டாதி' நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்குள் நுழைந்துள்ளார். இந்த பெயர்ச்சியில் சனிபகவானின் பார்வை ரிஷபம், கன்னி, தனுசு ஆகிய ராசிகளின் மீது படுவதால் இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனப்படுகின்றது.

ரிஷபம்
- உங்கள் ராசிக்கு ஒன்பது, பத்தாம் இடங்களுக்கு உரிய சனிபகவான் தற்போது பதினோராம் இடமான லாப ஸ்தானத்துக்கு வருகிறார்.
- இதனால் உங்களுக்கு உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டக்கூடிய காலகட்டமாக இது இருக்கும் ஆனால் எதிலும் நிதானம் மிகவும் முக்கியம்.
- பணியிடத்தில் நீங்கள் நினைத்தவை நடக்கும் என்றாலும் நீங்கள் பொறுமையாக இருந்தால் மட்டுமே அது கைகூடும்.
- பேச்சிலும் கொடுக்கல் வாங்கலிலும் நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
- உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்துக்கும் ஆறாமிடத்துக்கும் உரியவரான சனிபகவான், இப்போது ஏழாமிடத்துக்குச் செல்கிறார்.
- நீங்கள் குடும்ப உறவுகளை அனுசரித்து நடந்துகொண்டால் உங்களுக்கு மற்ற விடயங்கள் நன்மை தரும்.
- அலுவலகத்தில் நீங்கள் செய்யும் வேலையில் மிகவும் கவனமாக இருங்கள்.
- பெரிய பொறுப்புக்கள் பதவிகள் கைகூடி வரும் என்றாலும் நீங்கள் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
தனுசு
- உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்துக்கும் மூன்றாமிடத்துக்கும் உரியவரான சனிபகவான் இப்போதைய பெயர்ச்சியில் நான்காம் இடத்துக்குச் செல்கிறார்.
- இது அர்த்தாஷ்டம சனி என்பதை நினைவில் கொள்வது நல்லது.
- அதேசமயம், அமைதியும், நிதானமும் இருந்தால் அனைத்திலும் நல்லதே நடக்கும்.
- நீங்கள் ஒரு விடயத்தை செய்ய நினைத்து அதில் இறங்கிய பின்னர் பின்வாங்கினால் விளைவு மோசமாகும்.
- நீங்கள் முயற்ச்சி செய்ய செய்ய நன்மை கிடைக்கும். எதிலும் எச்சரிக்கை தேவை.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).