தூக்கமே இல்லை.. விஜய் பற்றி நடிகை சனம் ஷெட்டி போட்ட பதிவு வைரல்!
நடிகை சனம் ஷெட்டி நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் வருகை குறித்து சமீப காலங்களில் கலவையான கருத்துக்களைத் தெரிவித்து வந்த நிலையில், தற்போது விஜய் பற்றி வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றிபெற்ற போதிலும் ஆட்சி அமைப்பதில் தெளிவான பெரும்பான்மை கிடைக்காததால் இன்று வரையில் சிக்கல் நிலவி வருகின்றது.

இந்நிலையில்,5 எம்எல்ஏக்களை வைத்துள்ள காங்கிரஸ், 20 வருட திமுக கூட்டணியை முறித்து தவெக கூட்டணியில் இணைந்தது. நேற்று காலை 11;30 மணிக்கு தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டு, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரா உரிமை கோரினார்.
ஆனால், ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க ஆளுநர் மறுத்து விட்டார்.

ஐயுஎம்எல் கட்சி விஜய்க்கு ஆதரவு என முதலில் செய்தி வெளியானது. ஆனால் அந்த கட்சி இப்போது ஆதரவு இல்லை என கூறி இருக்கிறது. விசிக-வும் இன்னும் ஆதரவை உறுதியாக அறிவிக்கவில்லை. இதனால் மொத்த அரசியல் களமும் பரபரப்பில் உள்ளது.

சனம் செட்டி பதிவு
இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி இது பற்றி X தளத்தில் பேசி இருக்கிறார். "காலையில் பாசிட்டிவ் நியூஸ் வரும் என எதிர்பார்க்கிறேன். அதுவரை தூக்கம் இல்லை" என சனம் ஷெட்டி பதிவிட்டுள்ளார். குறித்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
So much better to have PMK support with 4 MLAs if VCK, IUML drop out!
— Sanam Shetty (@ungalsanam) May 8, 2026
Really hope to hear positive news by morning🤞
No sleep till then ! #CMVijay @TVKVijayHQ
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |