சீரியல் நடிகை ஆல்யா மானசாவா இது! பள்ளி பருவத்தில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க
சீரியல் நடிகை ஆல்யா மானசா தற்போது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ள தனது பள்ளி பருவ புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
ஆல்யா மானசா
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஆல்யா மானசா. மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி மூலம் தனது மீடியா பயணத்தை ஆரம்பித்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் நடிகையாக களமிறங்கிய இவர் தற்போது சின்னத்திரை நடிகைகளுள் டாப்பில் இருக்கின்றார் ராஜா ராணி தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள். தற்போது ஆல்யா மானசா ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் பாரிஜாதம் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகின்றது.

சமூக வலைத்தளங்களிலும் அதிக ஈடுபாடு காட்டிவரும் ஆல்யா மானசா தான் 11வது படிக்கும் போது வெளிநாட்டு தோழிகளுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்களை தனது இன்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் நம்ம ஆல்யாவா இது என ரசிகர்கள் வியப்படைந்து லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |