Misbehave பண்ண முன்னாள் காதலனுடன் கையும் களவுமாக மாட்டிய சம்யுக்தா! கணவர் எடுத்துள்ள முடிவு
சீரியல் நடிகை சம்யுக்தா விடயத்தில் விஷ்ணுகாந்த் எடுத்துள்ள முடிவு சமூக வலைத்தயங்களில் வைரலாகி வருகின்றது.
காதல் திருமணம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரஜினி, கோகுலத்தில் சீதை, என்றென்றும் புன்னகை, சிப்பிக்குள் முத்து, ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமாகியவர் தான் நடிகர் விஷ்ணுகாந்த்.
“சிப்பிக்குள் முத்து” என்ற சீரியலில் நடிக்கும் போது அவருடன் சேர்ந்து நடித்த நடிகை சம்யுக்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் திருமணம் செய்து தற்போது இரண்டு மாதங்கள் தான் ஆகின்றது. இருந்த போதிலும் இவர்களுக்கு ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து இருந்து வருகிறார்கள்.
மேலும் இவர்களின் பிரிவை உறுதிப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலிருந்து திருமணத்தின் போது ஜோடியாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தையும் நீக்கியுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் நேரலையில் ரசிகர்களை தொடர்பு கொண்டு இவர்கள் பக்கம் உள்ள நியாயங்களை கூறி வந்தார்கள்.
பேட்டியில் வெளியான ஓடியோ
இந்நிலையில், “சம்யுக்தா பற்றி சில விடயங்களை வெளியில் கொண்டு வர வேண்டாம் என நினைத்தேன்.
சம்யுக்தாவை நான் மிரட்டுகிறேன், பிளாக் மெயில் செய்கிறேன் என என் மீது பொய்யான குற்றஞ்சாற்றை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்திருந்தார்.
இதனால் என்னால் இந்த விடயத்தை இதுக்கு மேல் வைத்திருக்க முடியாது எனக் கூறி நேற்றைய தினம் அவர் சக நடிகருடன் தொடர்பில் இருந்த விடயத்தை ஓடியோவை வெளியிட்டார்.
மேலும் இந்த ஓடியோவை நான் வெளியீடுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கின்றது.
நான் வெளியில் செல்லும் போது எல்லோரும் ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள். எந்த தப்பும் பண்ணாமல் நா அசிங்கப்பட தேவையில்லை.” என கூறியுள்ளார்.
அத்துடன்,“ இனி நாங்கள் இணைந்து வாழ முடியாது ” என கருத்தையும் ஆணித்தனமாக கூறியிருந்தார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.