சினிமாவிற்கு பிரேக் கொடுக்கும் சமந்தா: மீண்டும் நோயுடன் போராட்டமா?
சினிமாவில் இருந்து சில காலம் ப்ரேக் எடுக்கப் போவதாக நடிகை சமந்தா ரூத் பிரபு அறிவித்திருக்கிறார்.
சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான வலம் வருபவர் தான் நடிகை சமந்தா.
இவர் தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்றைக்கு வரைக்கும் உச்ச நடிகையாக இருந்து வருகிறார்.
சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட இவர் தெலுங்கில் முன்னணி நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். நல்ல ஜோடிகளாக வலம் வந்த இருவரும் 2021ஆம் ஆண்டு சில காரணங்களால் தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்தனர்.
இவர் விவாகரத்துக்கு பின்னர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தார். அதற்குப் பிறகு மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு பெரும் பாடுபட்டு மீண்டும் வழமைக்கு திரும்பி அடுத்தடுத்து பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
நடிப்பில் இருந்து இடைவெளி
இந்நிலையில், சமந்தா நடிப்பில் இருந்து சிறிது காலம் இடைவெளி எடுக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார்.
2022ஆம் ஆண்டிலிருந்து தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவங்கள் மற்றும் தனது உடல்நலப் பிரச்சினைகளுடன் போராடுவதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
மேலும், தனது உடல்நிலையில் அதிக கவனம் செலுத்துவதற்கும் மயோசிடிஸ் நோய்க்கு கூடுதல் சிகிச்சைப் பெறவும் இந்த இடைவெளி எடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |