கால் வலியுடன், தட்டு தடுமாறி சமந்தா செய்த கடுமையான நேர்த்தி கடன்! வைரல் காணொளி இதோ
நடிகை சமந்தா அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட நிலையி், தற்போது பழனி முருகம் கோவிலுக்கு சென்று கடுமையான நேர்த்தி கடன் செய்துள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம்வரும் சமந்தா, அரிய வகை நோய் பாதிப்பினால் அவதிப்பட்டு வருகின்றார். தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டிலும் கால் பதித்து கலக்கிய இவர், சில மாதமாக உடல்நிலை சரியில்லாமல் காணப்பட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சமந்தா நடிப்பில் யசோதா படம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இன்னும் சில தினங்களில் இவரது சகுந்தலம் படம் ரிலீசாக உள்ளது.
இவர் நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் பின்பு கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். சகுந்தலம் படத்தில் நடித்துள்ள சமந்தா இந்த படத்திற்கு அதிகமான ரிஸ்க் எடுத்துள்ளார்.
சமீபத்தில் ஒரு அடிக்கூட எடுத்து வைக்க முடியாத அளவிற்கு கடுமையான உடல்வலியினால் அவதிப்பட்ட சமந்தா கண்ணீருடன் கஷ்டத்தினை பகிர்ந்திருந்தார்.
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துவரும் சமந்தாவிற்கு, நடுவில் அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டதால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது ஒருவழியாக முடிந்த அளவு வெளி உலகிற்கு வந்துள்ளார்.
பழனியில் சமந்தாவின் பிரார்த்தனை
தற்போது தெலுங்கில் 'குஷி' படத்தில் தற்போது நடித்து வரும் சமந்தா பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். படிக்கட்டுகளில் ஏறி சூடம் மற்றும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்துள்ளார்.
சமந்தாவுடன் 96 பட இயக்குனர் பிரேம் குமார் மற்றும் நண்பர்கள் வந்திருந்தனர். செய்தியாளர்களை சந்தித்த சமந்தா உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட பிறகு தற்போது கடவுளின் அருளால் மருத்துவர்கள் ஆலோசனையில் உடல் நலம் பெற வேண்டுதல்களை நிறைவேற்ற பழனி முருகன் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்ததாக கூறினார்.