என் திருமண பந்தத்தில் நான் 100% நேர்மையாகதான் இருந்தேன் - முதல்முறையாக மனம் திறந்த சமந்தா!
என் திருமண பந்தத்தில் நான் 100% நேர்மையாகதான் இருந்தேன் என்று நடிகை சமந்தா மனம் திறந்து பேசியுள்ளார்.
சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த அறிவிப்பைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயரான நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார் நடிகை சமந்தா. இதன் பிறகு, இவர்கள் இருவரும் தன்னுடைய வேலையில் மிகவும் பிஸியாக இறங்கி செயல்படத் தொடங்கினர்.
நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா -
சமீபத்தில் நடிகை சமந்தா ரசிகர்களுக்கு தான் மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் பின்பு, உடல் நிலை மேலும் மோசமடைந்ததால் ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த சமந்தா, பிறகுமேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சமீபத்தில் நாடு திரும்பினார்.
நான் 100% நேர்மையாகதான் இருந்தேன்
தற்போது சமந்தா நடிப்பில் `சகுந்தலம்’ படம் வெளியாகி இருக்கிறது. அதற்கான புரொமோஷன் வேலைகளில் நடிகை சமந்தா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
`மிஸ் மாலினி’ என்ற சினிமா தொடர்பான சேனலுக்கான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகை சமந்தா, விவாகரத்து குறித்து முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
அப்போது அவர் பேசுகையில்,
நான் விவாகரத்து குறித்து சமூகவலைத்தளங்களில் அறிவித்தேன். அதன் பின் சில நாட்களிலேயே எனக்கு ‘புஷ்பா’ படத்தில் ‘ஊ சொல்றியா’ பாடலில் நடனமாட வாய்ப்பு வந்தது. அப்போது என் குடும்பத்தார் இந்த பாட்டிலெல்லாம் நடிக்க வேண்டும். வீட்டில் இரு என்று அட்வைஸ் செய்தனர்.
என் நண்பர்களும் இந்தப் பாடலை ஏற்க வேண்டாம், அமைதியாக இரு என்று சொன்னார்கள். ஆனால் நான் எல்லோரின் அட்வைஸையும் கேட்டு விட்டு பாடலில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
ஏனென்றால், நான் என் திருமண பந்தத்தில் 100% நேர்மையாகதான் இருந்தேன். ஆனால் அது எனக்கு சரியாகவே அமையவில்லை. அதற்காக நான் ஏதோ தவறு செய்ததை போல், எதற்காக ஓடி ஒளிய வேண்டும்? நான் செய்யாத குற்றத்திற்கு எதற்கு என்னை நானே வருத்திக்கொள்ள வேண்டும்? ஏற்கெனவே எத்தனையோ வேதனைகளை அனுபவித்துவிட்டேன் என்றார்.