ரசிகருக்கு சரியான பதிலடி கொடுத்த சமந்தா! குவியும் வாழ்த்துக்கள்
பெண்களை மையப்படுத்தும் படங்கள் தொடர்பில் ரசிகர் ஒருவரின் பதிவிற்கு பதிலளித்திருக்கிறார் சமந்தா.
சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான வலம் வருபவர் தான் நடிகை சமந்தா.
இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். நல்ல ஜோடிகளாக வலம் வந்த இருவரும் 2021ஆம் ஆண்டு சில காரணங்களால் தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்தனர்.
இவர் விவாகரத்துக்கு பின்னர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அளவு கடந்த வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் சமந்தா பாதிக்கப்பட்டிருந்தார்.
பெண்களை முதன்மைப்படுத்தும் படங்கள்
இந்நிலையில், சென்னை, குரோம்பேட்டையில் உள்ள பிரபலமான வெற்றி, ராகேஷ் தியேட்டர் காம்ப்ளக்சில் 'கனெக்ட், ராங்கி, டிரைலவர் ஜமுனா, செம்பி' போன்ற பெண்களை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
குறித்த திரைப்படங்களின் பேனர்கள் தியேட்டர் முன்பாக வைக்கப்பட்டிருந்தன.
இதனை படம் பிடித்து இணையத்தில் பதிவு செய்த ரசிகர் ஒருவர், தமிழ் சினிமா எவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பாக இப்படியெல்லாம் நடக்கும் என்று கற்பனை செய்து செய்து கூடப்பார்க்க முடியாது. என டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
????????
— Samantha (@Samanthaprabhu2) January 2, 2023
Women Rising!! https://t.co/qR3N3OozK8
பெண்கள் எழுச்சிப் பெறுகிறார்கள்
இதனைப் பார்த்த சமந்தா குறித்த ரசிகருக்கு பதில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதில், “பெண்கள் உயர்ந்து கொண்டு வருகின்றனர்” என்று பதிவிட்டு இருந்தார். அந்த டுவிட்டிற்கு ஒருநபர், “ஆம், பெண்கள் உயர்வதே வீழ்வதற்குதான்” என்றார்.
இந்த தனி நபரின் டுவீட்டிற்கு, “மீண்டும் எழுந்து வருவது, எங்கள் பயணத்தை மேலும் இனிமையாக்குகிறது நண்பரே” என்று சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.