ஆண் குழந்தையை பெற்றெடுத்த சமந்தா... பெயர் என்ன தெரியுமா?
Actress Samantha Boy Baby Name Reveals: நடிகை சமந்தாவிற்கு நேற்றைய தினம் ஆண் குழந்தை பிறந்த நிலையில் இன்று தனது இன்ஸ்டாவில் மகிழ்ச்சியாக அறிவித்துள்ளார்.
நடிகை சமந்தா
நடிகை சமந்தா கௌதம் இயக்கத்தில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பின்பு அதர்வா நடித்த பாணா காத்தாடி படத்தில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள நிலையில், முன்னணி நடிகையாக தற்போதும் வலம் வருகின்றார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் அதிகமாக நடித்துள்ளார். இயக்குனர் ராஜ நிடிமோரு இயக்கிய ஃபெமிலி மேன் என்ற தொடரில் நடித்த போது, ராஜ் நிடிமோருவைக் காதலித்து வந்தார்.

பின்பு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 1ம் தேதி கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்த வருடம் கடந்த ஜூன் 24ஆம் தேதி, சமந்தா நடித்த தெலுங்கு திரைப்படமான ’மா இண்டி பங்காரம்’ ப்ரமோஷனில், தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.
ஆண் குழந்தைக்கு வைத்த பெயர்
நடிகை சமந்தா தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கடந்த ஜுன் 24ம் தேதி தெலுங்கு திரைப்படமான மா இண்டி பங்காரம் ப்ரொமோஷன் நேரத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சமந்தா இன்று தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட பதிவில், எங்களுக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அவரது பெயர் தேவ் நிடிமொரு. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு சமந்தா மற்றும் ராஜ் என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்துடன் தம்பதிகள் இருவரும் குழந்தையின் கையைப் பிடித்திருக்கும் புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளனர்.
நடிகை சமந்தாவிற்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |