மீனாட்சி குறித்து வாய் திறந்த நிஷாந்த்... நகை கொள்ளையில் நடந்தது என்ன?
Nishanth Open Talk Meenakshi: மதுரை நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட நிஷாந்த் கைதாகியுள்ள நிலையில், இவர் தனது காதலி குறித்து வெளியிட்டுள்ள தகவல் வைரலாகி வருகின்றது.
நகைக்ககடை கொள்ளை
மதுரையில் காளவாசல் பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் கடந்த 12ம் தேதி 11.384 கிலே கணக்கில் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போயுள்ளது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், கும்பலாக சேர்ந்து கொள்ளையடித்திருப்பார்களா? என்று யோசித்த போது சட்டென சிக்கியவர் தான் நிஷாந்த்.
தான் கொள்ளையடிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஒவ்வொரு கெட்டப்பில் வாடிக்கையாளராக வந்து நகைகளை நோட்டமிட்டுள்ளார். இதனால் அவர் கொள்ளையடிக்கும் போது அதிகமான கல் வைத்த நகைகள் எதையும் எடுக்கவில்லை.
நிஷாந்திற்கு துணையாக அவரது தந்தை சுரேஷ் மற்றும் காதலி மீனாட்சி இருந்ததாக கூறப்பட்ட அவர்களையும் போலிசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் மீனாட்சி மாடக்குளம் பகுதியில் நிஷாந்த் பதுக்கி வைத்துள்ள நகையையும் போலிசாரிடம் காட்டி கொடுத்துள்ளார்.
நிஷாந்த் நோட்டமிடும் போது தனது கெட்டப்பை மட்டும் மாற்றியவர் கையில் குத்தியிருந்த டாட்டூவை மறைக்காததால் கொத்தாக மாட்டியுள்ளார். இவரை பேருந்து ஓட்டுநர் ஒருவர் காட்டிக் கொடுத்துள்ளார்.

மீனாட்சி குறித்து கூறியது என்ன?
இந்நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அனைத்தையும் போலீசார் மீட்டுள்ளனர். கைதானவர்களை டிசம்பர் 1ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் நிஷாந்த்தை நேற்று மதுரை மாவட்ட முதலாவது விரைவு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்பொழுது குறித்த கொள்ளைக்கும் மீனாட்சிக்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளாராம்.
இதற்கு நீதிபதி கொள்ளை வழக்கில் யாருக்கு தொடர்பு என இப்பொழுது பேசக்கூடாது என்றும் போலீஸ் கஸ்டடி குறித்த மனு மீது மட்டும்தான் தற்போது விசாரணை நடைபெறுவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் நிஷாந்த்தை துன்புறுத்தக்கூடாது, அவரது வழக்கறிஞரை சந்திக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் போலிசார் தங்களத கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதாக கூறப்படுகின்றது.
ஐந்து நாட்கள் காவலில் எடுக்க கேட்ட நிலையில் ஒருநாள் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணை முடிந்து மத்திய சிறைக்கு அழைத்து செல்ல போலிசார் வேனில் ஏற்றிய போது நிஷாந்திடம் நிரூபர்கள் கேள்வி எழுப்பினர்.
ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்த அவர் இந்த கொள்ளைக்கும், மீனாட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். உடனே அருகில் இருந்த போலிசார் அவரை பேசவிடாமல் தடுத்து, தன்னருகே இழுந்து அமர வைத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |