அனுசம் நட்சத்திரத்திற்குச் செல்லும் புதன்: இந்த ராசிகளுக்கு பணமழை தான்!
Mercury Enters Anuradha Nakshatra: வேத ஜோதிடத்தின்படி, கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படுபவர் புதன். இவர் புத்திசாலித்தனம், பேச்சுத் திறன், கல்வி மற்றும் வியாபாரத்தின் காரணி ஆவார். மிதுனம், கன்னி ராசிகளின் அதிபதியான புதன், அடிக்கடி ராசி மற்றும் நட்சத்திரப் பெயர்ச்சியை மேற்கொள்வார்.
தற்போது துலாம் ராசி, விசாக நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில், டிசம்பர் 02 ஆம் தேதி விருச்சிக ராசிக்கும், டிசம்பர் 04 ஆம் தேதி அனுசம் நட்சத்திரத்திற்கும் புதன் பெயர்ச்சியாகவுள்ளார்.

அனுசம் நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் என்பதால், இந்தப் பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளிலும் குறிப்பிடதக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக, வியாபாரத்தில் லாபம், நிதி நிலையில் முன்னேற்றம், தொழிலில் வளர்ச்சி போன்ற பல்வேறு வழிகளிலும் சாதகமான பலன்களை கொடுக்கப்பேகின்றது. அப்படி புதன் பெயர்ச்சியால் பலனடையப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ரிஷபம்

புதன் நட்சத்திரப் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும். பணிபுரிபவர்களுக்குப் புதிய நபர்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு கிடைக்கும்.
வணிகர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கலாம். கூட்டு தொழில் வாய்ப்புகளும் தேடி வரும். இருப்பினும், ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பது அவசியம்.நிதி நிலையும் படிப்படியாக மேம்படும்.
கடகம்

புதன் நட்சத்திரப் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களின் வாழ்வில் பல நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும். மாணவர்களுக்குச் சாதகமான காலமாக இருக்கும்.
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உங்களின் செயல்திறனும் படைப்பாற்றலும் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்றுத் தரும்.
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன், ஏற்கனவே செய்த முதலீடுகளும் பலன் தரும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு வந்து சேரும். புதுமணத் தம்பதிகளுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
கன்னி

புதன் நட்சத்திரப் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். குறிப்பாக, மார்க்கெட்டிங் மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்குச் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.
தொழிலதிபர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கும். வேலை நிமித்தமாகப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். உடன்பிறந்தவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடும் வாய்ப்பும் கிடைக்கும்.
மகரம்

புதன் நட்சத்திரப் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். புதிய வருமான வழிகள் உருவாகி நிதி நிலை மேம்படும். பணிபுரிபவர்களுக்குச் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
தொழிலதிபர்கள் புதிய நட்புகள் மூலம் நிதி ஆதாயம் பெறுவார்கள். நீண்ட நாட்களாகத் தடைப்பட்ட வேலைகள் மீண்டும் வேகம் பெறும். இருப்பினும், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காமல் நிதானமாகச் செயல்படுவது நல்லது. குறிப்பாக பல வழிகளில் வருமானம் அதிகரித்து நிதி நிலை மேம்படும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |