ஒரே ஒரு பாடலால் தொலைந்த வாழ்க்கை! சமந்தா விவாகரத்தின் உண்மை காரணம் அம்பலம்
நடிகை சமந்தா விவாகரத்து குறித்து வெளிப்படையாக கூறியுள்ள கருத்து சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம்வரும் சமந்தா, அரிய வகை நோய் பாதிப்பினால் அவதிப்பட்டு வருகின்றார்.
தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டிலும் கால் பதித்து கலக்கிய இவர், சில மாதமாக உடல்நிலை சரியில்லாமல் காணப்பட்டுள்ளார்.
இவர் நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் பின்பு கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் விவாகரத்து பெற்ற இந்த ஜோடிகள், இதற்கான காரணத்தினை வெளியிடாமல் இருந்தது.
தற்போது மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்கு சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். இவர் நடித்த சகுந்தலம் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்வு சென்று கொண்டிருக்கின்றது.
இதன் போது பேசிய சமந்தா, “ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஆடிய அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். அப்போது என்னுடைய ஒவ்வொரு நலம் விரும்பிகளும், குடும்ப உறுப்பினர்களும் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட வேண்டாம் என்று அறிவுறுத்தியதாகவும், ஆனால் நான் அதில் உறுதியாக இருந்தாக கூறியுள்ளார்.
விவாகரத்துக்கு பின்பு அதே வீட்டில் இருப்பதற்கு எனக்கு விருப்பமில்ல... எந்த தவறும் செய்யாமல் நான் 100 சதவீதம் உண்மையாகவே இருந்ததாகவும் சமந்தா கூறியுள்ளார்.
நடிகை சமந்தா இவ்வாறு கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஐட்டம் பாடலுக்கு ஆடியதால் தான் வீட்டில் பிரச்சினை எழுந்ததாக கூறிவருகின்றனர்.