பேரழகில் சமந்தா.. அவர் அணிந்திருந்த ஆடையின் விலை மட்டும் இத்தனை லட்சமா?
சமீபத்தில் விருது நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட சமந்தா அணிந்திருந்த ஆடையின் விலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் என பல துறைகளிலும் களம் கண்டு வருகிறார் சமந்தா.
கணவருடன் விவாகரத்து
கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கிட்டதட்ட 3 வருடங்கள் மண வாழ்க்கைக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாக சைதன்யாவை பிரிவதாக அவர் அறிவித்தார்.
திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்து வந்த சமந்தா கவச்சியான வேடங்களிலும், நெருக்கமான காட்சிகளிலும் நடித்து வந்தது விவாகரத்து பிரச்சனைக்கு காரணமாக சொல்லப்பட்டது.

எது செய்தாலும் டிரெண்ட்
தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் அவர் கிரிட்டிக்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ் என்கிற விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அந்த விழாவில் பச்சை நிற மாடர்ன் கவுனில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் அவர் அணிந்து வந்த உடையின் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அந்த பச்சை மற்றும் கருப்பு உடை குறித்து ஆன்லைனில் தேடி பார்த்தபோது அதன் விலை ஒரு லட்சத்து 80 ஆயிரம் என்று இருந்ததாம்.
சம்பளத்தை உயர்த்திய சமந்தா
‘புஷ்பா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றீயா’ பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் கலக்கிவிட்டார் சமந்தா.
இதனால் திரையுலகில் அவரது மார்க்கெட் உயர்ந்துவிட, சம்பளத்தையும் கோடிக்கணக்கில் உயர்த்திவிட்டாராம்.
அதாவது நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வேண்டும் என்கிறாராம், 3 கோடி வரை சம்பளம் எதிர்பார்க்கிறாராம் சமந்தா.
