மீண்டும் சர்ச்சையில் நடிகை சமந்தா! கவர்ச்சி உடையில் சரக்கு விளம்பர காட்சி
சரக்கு விளம்பரத்தில் பயங்கர கவர்ச்சியில் நடித்துள்ள சமந்தாவின் காணொளியினால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தென்னிந்திய சினிமா உலகில் உச்சக்கட்ட நடிகையாக வலம்வரும் நடிகை சமந்தா சமீபத்தில் அதிக சர்ச்சையில் சிக்கி வருகின்றார்.
இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் கணவர் நாக சைதன்யாவினை பிரிந்து வாழ்ந்து வருவது இன்னும் மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகின்றது.
இந்நிலையில் சமந்தா செய்யும் சிறு சிறு விடயங்கள் கூட பெரிதாக பார்க்கப்பட்டு வருகின்றது.
சமந்தா ஒர்க் அவுட் செய்யும் வீடியோ, சோஷியல் மீடியாவில் பதிவிடும் போஸ்ட் என அனைத்தும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
புஷ்பா பட பாடல் வெளியாக சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது சரக்கு விளம்பர வீடியோவில் படு கவர்ச்சியான உடையணிந்து நடித்துள்ளார் சமந்தா. இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.