அந்த வயதிலேயே காதல் கடிதம் எழுதி சிக்கிய சாய் பல்லவி! யாருக்கு தெரியுமா?
நடிகை சாய் பல்லவி காதல் கடிதம் எழுதி வசமாக சிக்கியதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சினிமா பயணம்
தமிழ் மட்டுமல்ல தெலுங்கு படங்களில் பிஸியாக இருந்து வரும் நாயகி தான் சாய் பல்லவி.
இவரின் அழகை சொல்ல தமிழிலில் வார்த்தைகளே இல்லையென்று தான் கூற வேண்டும்.
மேலும், டாக்டர் படிப்பை முடித்து விட்டு நடனம் மீதும், நடிப்பு மீதும் கொண்ட ஆர்வம் காரணமாக சினிமாவிற்கு இருந்து வருகிறார்.
இவர் சூர்யா, தனுஷ், என தமிழில் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் நடித்து மற்ற நடிகைகள் மத்தியில் மாஸ் காட்டி வருகிறார்.
என் அம்மா என்னை அடித்தார்.
இந்த நிலையில், சாய் பல்லவி சமிபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் அவரின் காதல் பற்றி ஒரு விடயம் கூறியுள்ளார்.
அதில், “பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும்போது உடன் படிக்கும் ஒரு பையன் மீது காதல் வயப்பட்டேன், அவனுக்கு கொடுக்க தைரியமாக ஒரு கடிதம் எழுதி அதனை புத்தகத்தில் வைத்திருந்தேன்.
அந்த கடிதத்தை ஒரு நாள் அம்மா பார்த்து விட்டார். அப்போது என்னை அடித்தார் மற்றும் திட்டினார்” என கவலையாக கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றதுடன், இதனை பார்த்த ரசிகர்கள்,“ அந்த வயதிலேயே கடிதமா? ” என ஷாக்கிய வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.