முகம் பளபளவென்று இருக்க வேண்டுமா... ரோஜா ஸ்க்ரப் பயன்படுத்துங்க
மற்றவர்களைக் காட்டிலும் நாம் அழகாகத் தெரிய என்னவெல்லாம் செய்கின்றோம். கையில் கிடைக்கும் க்ரீம்களையெல்லாம் உபயோகிக்கிறோம். அவ்வாறு உபயோகித்தாலும் சில நேரங்களில் சரியான பலன் கிடைப்பதில்லை.
ஆனால், இயற்கையான பொருட்களைக் கொண்டு சருமத்தை அழகாக்க நினைத்தால் அது நிச்சயம் நமக்கு பலன் கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அந்த வகையில் ரோஜாப் பூ கொண்டு எவ்வாறு ஸ்க்ரப் ஒன்றை தயார் செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையானவை
ரோஜாப் பூ - 1 கப் (உலர்ந்தது)
ரோஸ் வோட்டர் - 3 தேக்கரண்டி
பொடித்த சர்க்கரை - 1 தேக்கரண்டி
தேன் - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 1 தேக்கரண்டி
எவ்வாறு செய்வது?
முதலில் ரோஜா இதழ்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் பொடி செய்த ரோஜா, தேன், ரோஸ் வோட்டர், பொடித்த சர்க்கரை, தண்ணீர் என்பவற்றை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
கலந்து வைத்துள்ள ஸ்க்ரப்பை முகத்தில் நன்றாக தேய்த்துவிட்டு, 10 நிமிடம் அப்படியே விடவும். பின்னர் முகத்தை கழுவி விடவும்.