ஓட்டை குடையின் விலை ஒரு லட்சமா? அப்படியென்ன ஸ்பெஷல்
ஆடம்பர பிராண்ட்களான கூச்சி மற்றும் அடிடாஸ் இணைந்து 1.2 லட்ச ரூபாய் விலையில் சீனாவில் ஒரு குடையை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த குடை மழையை தடுக்காது ஆனால் வெயிலிலிருந்து மட்டும் காக்குமாம். இந்த ஓட்டை குடையின் படங்கள் சமூக ஊடகங்களில் பல லட்சம் பேரால் பகிரப்பட்டு கிண்டலடிக்கப்பட்டது.
சீனாவின் அறிமுகம்
ஆடம்பர பொருட்களுக்கான முக்கிய சந்தையாக சீனா விளங்குகிறது. கடந்த ஆண்டு சீனாவில் ஆடம்பரப் பொருட்களின் விற்பனை 36 சதவீதம் கூடியது. அடுத்த மூன்று ஆண்டுகளில் சீனா ஆடம்பரப் பொருட்களின் மிகப்பெரிய சந்தையாக மாறும் என அத்துறை நிபுணர்கள் கணிக்கின்றனர்.
இந்நிலையில் கூச்சி மற்றும் அடிடாஸ் ஆகியவை இணைந்து பல கலெக்ஷன்களை ஜூன் 7ல் சீனாவில் வெளியிடுகின்றன. அதன் ஒரு பகுதியாக ஒரு குடையை ஆன்லைனில் விளம்பரப்படுத்தினர். அதன் விலையால் அந்த குடை உலகளவில் டிரெண்டானது.
நடிகை ரோஜாவிடம் திருமணம் செய்து வைக்க கேட்ட முதியவர்! ரோஜாவின் அதிரடி பதில்
ஓட்டை குடையின் விலை 1 லட்சம்
சுமார் ரூ.1.2 லட்சம் என அந்த குடைக்கு விலை நிர்ணயித்துள்ளனர். மேலும் அந்த குடை வாட்டர்ப்ரூப் கொண்டது அல்ல. அதனால் மழையை தடுக்காது. வெயிலிலிருந்து மட்டும் காக்கும். இல்லையென்றால் அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம் என கூறியுள்ளனர்.
இதனை சீன சமூக வலைதளமான வெய்போவில் பதிவு செய்திருந்தனர். அதனை சுமார் 1.4 கோடி பேர் பார்த்துள்ளனர். பலரும் கிண்டல் செய்துள்ளனர், சிலர் விமர்சித்துள்ளனர்.
”நடைமுறைக்கு ஒத்துவராதவற்றையும் தங்கள் மதிப்பைக் காட்டுவதற்காக சிலர் வாங்கி பயன்படுத்துகிறார்கள்” என ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.