ரோபோ சங்கருக்கு என்னதான் ஆச்சு: இருக்க இருக்க இன்னும் மெலிந்துப் போக காரணம் என்ன?
பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் இன்னும் இன்னும் உடல் மெலிந்து எழும்பும் தோலுமாக மாறியிருக்கிறார். இதற்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.
ரோபோ சங்கர்
நகைச்சுவை நடிகராக பிரபலமான ரோபோ சங்கர் முதலில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை ஆரம்பித்தார்.
அதன் பின் கலக்கபோவது யாரு, அசத்தப் போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பல குரலில் பேசி அசத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதற்குப் பின்னர் தான் சினிமாவிலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்து வாய்ப்புகள் வர பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார்.
தொடர்ந்தும், மாரி, விஸ்வாசம், வேலைக்காரன், பிகில் போன்ற படங்கள் இவரை இன்னும் பிரபலமாக்கியது.
உடல்வற்றிய நிலையில் ரோபோ சங்கர்
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ரோபோ சங்கரின் புகைப்படம் ஒன்று வெளியாகியிருந்தது அதனைப் பார்த்த அனைவரும் அப்படியே ஸாக்கி விட்டார்கள்.
ஏனெனில் ரோபோ சங்கர் எப்போதும் கொளு கொளுவென கொஞ்சம் அதிக எடையுடன் தான் இருப்பார். ஆனால் அந்தப் படத்தில் அப்படியே மொத்தமாக மாறியிருக்கிறார்.
தொடர்ந்தும் இது குறித்து தெரியவந்ததாவது, படத்திற்காக உடல் எடையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் , ஒரு வருடமாகவே உடல் எடை குறைப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அவர் மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம், இதுதான் எடையிழப்புக்கு காரணம், வேறு எதுவும் கிடையாது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இருந்த அளவிலும் பார்க்க இன்னும் அதிக எடை குறைந்து அடையாளம் தெரியாமல் மாறிப்போய் இருக்கிறார்.