மாலையும் கழுத்துமாக ரோபோ சங்கர்: திருமணத்தில் எப்படியிருக்கிறார் பாருங்க
காமெடி நடிகர் ரோபோ சங்கரின் திருமண புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
ரோபோ சங்கர்
நகைச்சுவை நடிகராக பிரபலமான ரோபோ சங்கர் முதலில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை ஆரம்பித்தார்.
அதன் பின் கலக்கபோவது யாரு, அசத்தப் போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பல குரலில் பேசி அசத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதற்குப் பின்னர் தான் சினிமாவிலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்து வாய்ப்புகள் வர பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார்.
தொடர்ந்தும், மாரி, விஸ்வாசம், வேலைக்காரன், பிகில் போன்ற படங்கள் இவரை இன்னும் பிரபலமாக்கியது.
இந்நிலையில் கொஞ்ச நாளாக வெளியில் வராமல் இருந்த ரோபோ சங்கர் திடீரென மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் இதனைப் பார்த்த ரசிகர்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ரோபோ சங்கர் அவ்வப்போது தனது குடும்பத்துடன் ரீல்ஸ் செய்து வெளியிடுவார்கள்.
அதுமட்டுமல்லாமல் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜாவிற்கும் திருமணம் நிகழவுள்ளது என அறிவித்திருந்தார்கள். இந்நிலையில்,
ரோபோ சங்கரின் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.