தொங்கும் தொப்பையை ஒரே மாதத்தில் குறைக்கணுமா? இந்த கஞ்சியை காலையில் குடிங்க
பொதுவாகவே ஆண்களும் சரி, பெண்களும் சரி தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பான விடயம் தான்.
ஆனால் தற்காலத்தில் பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்தப்படி மணிக்கணக்கில் வேலைபார்ப்பது, துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, போதிய உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால், இளம் வயதிலேயே தொப்பை மற்றும் உடல் பருமன் அதிகரிக்க ஆரம்பித்துவிடுகின்றது.
அதனால் தொப்பை குறைக்க உடற்பயிற்சி செய்யவும் நேரமின்றி, விரைவில் தொப்பையை குறைக்க சந்தைகளில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் முயற்சித்து நேரத்தையும், பணத்தையும் இழந்தது மட்டுமன்றி பல்வேறு பாதகமாக ஆரோக்கிய பிரச்சினைகளையும் ஏற்படுத்திக்கொள்கின்றார்கள்.
அதிக செலவின்றி விரைவில் தொங்கும் தொப்பை மற்றும் உடல் பருமனை குறைத்து கட்டுக்கோப்பான உடலமைப்பை பெறுவதற்கு மாப்பிள்ளை சம்பா அரிசியை வைத்து எவ்வாறு அசத்தல் சுவையில் கஞ்சி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மாப்பிள்ளை சம்பா அரிசி - 1 கப்
சீரகம் - 1 தே.கரண்டி
மிளகு - 1 தே.கரண்டி
வெந்தயம் - 1/4 தே.கரண்டி
எண்ணெய் - 1 தே.கரண்டி
பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 2 கொத்து
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 2 (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கியது)
தண்ணீர் - 10 கப்
உப்பு - சுவைக்கேற்ப
தேங்காய் பால் - 1 1/2 கப்
செய்முறை
முதல் நாள் இரவே மாப்பிள்ளை சம்பா அரிசியை ஒரு பாத்திரத்தில் எடுத்து தண்ணீரில் 2 முறை கழுவிய பின்னர் சுத்தமான நீரை ஊற்றி, அரிசியை 10 மணிநேரம் ஊறவிட வேண்டும்.
மறுநாள் காலையில், அரிசி ஊற வைத்த நீரை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அரிசியை ஒரு துணியில் போட்டு, லேசாக உலர்த்திக் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு மிக்சர் ஜாரில் சீரகம், மிளகு, வெந்தயம் மற்றும் உலர வைத்த அரிசி ஆகியவற்றை சேர்த்து, கொரகொரப்பான பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் கஞ்சி செய்ய ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்பு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து, சிறிதளவு உப்பு தூவி நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து கேரட், பீன்ஸ் சேர்த்து 3-4 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கி பின்னர், அதில் 10 கப் தண்ணீர் சேர்த்து(அப்படி ஊற்றும் நீரில் அரிசி ஊற வைத்த நீரை பயன்படுத்திக் கொள்ளலாம்)
பின்னர் அதில் அரைத்த கஞ்சி பொடியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பை தூவி தொடர்ந்து அவ்வப்போது கிளறி விட்டு 15 நிமிடங்கள் வரையில், கஞ்சியை நன்கு கொதிக்க விட வேண்டும்.
கஞ்சி கெட்டியாக மாறும் போது, இறக்கி, அதில் தேங்காய் பாலை ஊற்றி கிளறி பரிமாறினால், சுவையான மாப்பிள்ளை சம்பா அரிசி கஞ்சி தயார்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பேராடுபவர்கள் இந்த கஞ்சியை தொடர்ந்து 30 நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தை காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |