ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு? கண்கலங்கியபடி பிரியங்கா கூறிய தகவல்
நடிகர் ரோபோ சங்கர் எடையைக் குறைத்து எலும்பும் தோலுமாக மாறிய புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரோபோ சங்கர்
பிரபல ரிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் அறிமுகமாகி மக்களைக் கவர்ந்தவர் தான் ரோபோ சங்கர். தனது நகைச்சுவையான பேச்சினால் ரசிகர்களைக் கவர்ந்த இவர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகின்றார்.
ஆனால் சமீபத்தில் அவரது புகைப்படம் வெளியாகி ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆம் உடல் எடையை தாறுமாறாக குறைத்து எலும்பும் தோலுமாக காணப்பட்டார்.
இதற்கு காரணம் உடல் எடையைக் குறைக்க அவர் தீர்மானம் எடுத்துள்ளதாகவும், மஞ்சள் காமாலை ஏற்பட்டதை கவனிக்காமல் விட்டதால் இப்படி ஆகிவிட்டார் என்று பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரியங்கா கூறியது என்ன?
இந்நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா ரோபோ சங்கர் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், அவர் படங்களில் நடித்துக் கொண்டு தான் இருக்கின்றார்... வெள்ளித்திரையில் நடிப்பதால் தான் சின்னத்திரையில் வராமல் இருக்கின்றார்.
இடையில் படங்களில் நடிக்காமல் இருந்த போது, KPY சாம்பியன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். சமீபத்தில் கூட அவர் நடித்த படம் வெளியாகியது.
அவரது தனிப்பட்ட வாழ்க்கையினை பார்க்க வேண்டும், அவருக்கென்று பிரச்சினைகள் இருக்கும்... அதனால் கூட தற்போது படங்களில் நடிக்காமல் இருக்கலாம்.
மேலும் அவருக்கு வயதாகிக் கொண்டிருப்பதால் உடல் எடையைக் குறைப்பது என்பது சரியான முடிவாகும். அதனால் கூட அவர் உடல்எடையை குறைத்திருப்பார்... மற்றபடி எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியதோடு, விரைவில் சின்னத்திரை பக்கம் வருவார் என்றும் பிரியங்கா கூறியுள்ளார்.