அப்பாவை இழந்த துயரிலும்... மறைந்த நடிகர் மயில்சாமிக்காக ரோபோ சங்கரின் மகள் செய்த விடயம்!
தனது தந்தையை இழந்து இருபது நாள் கூட ஆகாத நிலையில், மறைந்த நடிகர் மயில்சாமியின் பிறந்த நாளையொட்டி அவர் மகன்கள் மற்றும் ரோபோ சங்கரின் மகள் அன்னதானம் வழங்கி வைத்த விடயம் தற்போது இணையத்தில் வைராகி வருவதுடன், இந்திரஜாவின் குணத்துக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றது.
ரோபோ ஷங்கர்
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் சின்னத்திரை பக்கம் வந்து மக்களை கவர்ந்தவர் தான் ரோபோ ஷங்கர்.
கலக்கப்போவது யாரு, அது இது எது என எந்த நிகழ்ச்சி எடுத்தாலும் ரோபோ ஷங்கர் இருப்பார், அந்த அளவிற்கு ஓய்வே இல்லாமல் எல்லா நிகழ்சிகளிலும் பங்கேற்று மக்களை மகிழ்வித்தார்.
அவரின் திறமையால் வெள்ளித்திரையிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலும் ஒரு வலம் வந்தார். அஜித், விஜய், தனுஷ் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் படங்கள் நடித்து அசத்தினார்.
யாரும் எதிர்பாராத வகையில்,கடந்த செப்டம்பர் 18ஆம் திகதி ரோபோ ஷங்கர் அவர்கள் உயிரிழந்தார். வெறும் 46 வயதில் இவரின் இழப்பு திரையுலகினரையும் அவரின் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதனை தொடர்ந்து ரோபோ சங்கர் மரணத்தில் அவர் மனைவி பிரியங்கா நடனமாடியது தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் வந்தன. இது குறித்து சில தினங்களுக்கு முன்னர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா அவங்க டான்ஸ்லதான் அவங்களுடைய அன்பை வெளிப்படுத்துவாங்க என உருக்கமாக விளக்கமளித்தார்.
மேலும் அப்பா விட்டுச் சென்ற கடமைகளை முடிப்போம் அவர் சென்ற பாதையில் தொடர்ந்து பயணிப்போம். இதற்கு ரசிகர்கள், பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், மறைந்த நடிகர் மயில்சாமி பிறந்த நாளையொட்டி அவர் மகன்கள் மற்றும் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா அன்னதானம் வழங்கிய விடயம் இணையத்தில் தற்போது வைராலாகி வருகின்றது. நடிகர் மயில்சாமி, நடிகர் ரோபோ ஷங்கரின் நண்பரும், சக கலைஞருமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |