சரிகமப லிட்டில் சாம்ஸ் - ஜாதிவிட்டு இசையால் அரங்கேறிய குரல்... நடுவர் சரனின் ஆதங்கம்
சரிகமப லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சியில் சுமன்ராஜ் எனும் சிறுவன் தன்னுடைய பாடிய பாடல் அரங்கத்தில் இருந்த அனைவரையும் ஈர்த்துள்ளது.
சரிகமப லிட்டில் சாம்ஸ்
மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றால் அது சரிகமப நிகழ்ச்சி தான். இதில் சீனியர் சீசன் 5 தற்போது நடந்து முடிந்துள்ளது.
அதில் டைடில் வின்னராக சுசாந்திக்கா தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதில் அவருக்கு பரிசாக ஒரு வீடும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சரிகமப லிட்டில் சாம்ஸ் நேற்று ஆரம்பமானது.
அதில் பல சிறுவர்கள் தங்கள் கனவுகளுடன் தாய் தந்தை உதவியுடன் அரங்கத்தில் தங்கள் குரல் திறமையை காட்டினர். இதில் பல குரல்கள் ரசிகர்களின் மனதை தொட்டது.
அப்படி ஒரு குரல் தான் சிறுவன் சுமன்ராஜ் என்பவனின் குரல். இவன் பாடும்போது அப்படியே கங்கை அமரன் பாடுவது போல குரல் மிகவும் தெளிவாக இருந்தது.
பாடிய அந்த சிறுவன் கூறியது "நான் பாடியதற்கு பின்னால் ஒரு முதுகெலும்பாக இருப்பது என்னுடைய தாத்தா தான் என கூறினான்.
அவன் கூறிய அந்த வார்த்தைக்கு நடுவர் சரண் இசைக்கெல்லாம் ஜாதி இல்லை திறமை இருப்பவர்கள் எல்லாம் ஒன்று தான் என கூறி நடுவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த சிறுவனை தெரிவு செய்தனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |