அதீத பொறுப்புணர்வு கொண்ட ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?
ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, திருமண வாழ்க்கை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் மிகுந்த பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்களாம். இவர்கள் எடுத்த காரியத்தை முடிக்கும் வரையில் எவ்வளவு தடைகள் வந்தாலும் அதை தாண்டி போராடக்கூடிய குணத்தை கொண்டிருப்பார்கள்.

அப்படி மிகுந்த பொறுப்புணர்வையும், கடமை உணர்வையும் பிறப்பிலேயே கொண்டிருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் வலுவான பொறுப்புணர்வுக்கும், அசைக்க முடியாத உறுதிக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
அன்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுவதால் இவர்கள் உறுதியானவர்கள் மற்றும் நம்பகமானவர்களாக அறியப்படுகின்றார்கள்.
குடும்ப உறவுகள் மீது அதிக அன்பு கொண்ட இவர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுக்கான எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பொருட்படுத்தாமல், தங்கள் இலக்குகள் மற்றும் பொறுப்புகளில் உறுதியாக இருப்பார்கள்.
கடகம்

கடகம் ராசியினரும் தங்களின் வலுவான பொறுப்புணர்வுக்கு கடமை தவறாமைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
குறிப்பாக குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்கள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டும் குணம் இவர்களிடம் நிச்சம் இருக்கும்.
சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்காரர்கள், தாங்கள் அன்புக்குரியவர்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் பொறுப்புக்களையும் சரியாக நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் தீவிரமான உறுதியுக்கும், தங்கள் இலக்குகளில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் பெயர் பெற்றவர்களாக அறியப்படுகின்றார்கள்.
இவர்கள் தங்களின் தனிப்பட்ட கவலைகளை யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள விரும்புவது கிடையாது. ஆனால் குடும்பத்தின் கஷ்டங்களை சொல்லாமலேயே புரிந்துக்கொண்டு மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துக்கொள்வார்கள்.
அது ஒரு தொழில் இலக்கைத் தொடர்வதாக இருந்தாலும் சரி அல்லது சுய முன்னேற்றத்தில் பணியாற்றுவதாக இருந்தாலும் சரி, விருச்சிக ராசிக்காரர்கள் பயணம் முழுவதும் கவனம் செலுத்தி பொறுப்புடன் செயல்படும் குணத்தை கொண்டிருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |