ரோபோ சங்கரின் இந்த நிலைமைக்கு இந்த பழக்கம் தான் காரணம்! உண்மையை கூறிய சர்ச்சை நாயகன்
ரோபோ சங்கரின் எடை இழப்பிற்கு என்ன காரணம் என்பது தொடர்பில் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ரோபோ சங்கரின் சினிமா பயணம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “கலக்கப் போவது யாரு” என்ற நிகழ்ச்சியில் பிரபலமாகியவர் தான் ரோபோ சங்கர்.
இவர் நகைச்சுவை மற்றும் மிமிக்ரி என பல் திறமை கொண்ட பிரபலமாக காணப்படுகிறார்.
இதனை தொடர்ந்து இவர் சினிமாவிலும் முக்கிய கதாபாத்திரங்கள் நடித்து பட்டைய கிளப்பியுள்ளார்.
நாம் படங்களில் பார்க்கும் போது திடகாத்திரமான உடல்வாகுடன் இருந்த ரோபோ சங்கர் சமிபத்தில் வெளியான புகைப்படத்தில் மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்படுகிறார்.
இந்த நிலையில், சினிமா பத்திரிக்கையாளரும், நடிகருமான நடிகர் பயில்வான் ரங்கநாதன் ரோபோ சங்கரின் உடல் நிலை குறித்து பல சர்ச்சையான தகவல்களை வெளியிட்டிருந்தார்.
ரோபோ சங்கரின் இந்த நிலைக்கு என்ன காரணம்?
அதில், “ ரோபோ சங்கரை மிமிக்ரி கலைஞராக இருக்கும் போதே என்னுடன் நல்ல பழக்கம். இவர் டயட் மற்றும் உடற்பயிற்சி என தன்னுடைய உடம்பை அழகாக வைத்திருந்தார்.
பின்னர் இவர் நண்பர்களுடன் இணைந்து மது அருந்துவார். இது காலப்போக்கில் ரோபோ சங்கரை அடிமையாக்கியது. மேலும் இந்த பழக்கத்தினால் இவர் பல நாட்கள் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளார்.
இதனுடன் தான் இவருக்கு மஞ்சள் காமாலை நோயும் வந்துள்ளது. இவரின் உடலை பார்க்கும் போது எனக்கு கவலையாக இருக்கின்றது” என கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த இணையவாசிகள்,“ இது தான் காரணமா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.