நெஞ்செலும்பு தெரிய வெளியான புகைப்படம்! ரோபோ சங்கரை ஓவர் டேக் செய்யும் மனைவி..
நடிகர் ரோபோ சங்கர் உட்பட மனைவியும் மெலிந்த நிலையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் தான் ரோபோ சங்கர். இவர் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவரின் நடிப்பிற்கும் பேச்சு திறமைக்கும் தமிழகத்தில் பலக் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நடிகை ரோபோ சங்கர் அவர்கள் சமிபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் அனைத்திலும் உடல் மெலிந்த நிலையில் தான் காணப்படுகிறார்.
இது குறித்து அவர்களின் ரசிகர்கள் பல கேள்வி எழுப்பி வரும் நிலையில், அவரின் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தில் அமுல் பேபி போல் இருந்த அவரின் மனைவியும் மெலிந்த நிலையில் காணப்படுகிறார்.
எடை இழப்பிற்கு என்ன காரணம்?
அந்தவகையில் ரோபோ சங்கருக்கு ஏன் இப்படியானது என கேள்வியெழுப்பும் போது அவரின் மகள், “சித்தப்பா படங்களில் பிஸியாக இருந்தார்.
படத்திற்காக உடல் எடையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஒரு வருடமாகவே உடல் எடை குறைப்பில் கவனம் செலுத்தினார். அத்துடன் இரண்டு, மூன்று நிகழ்ச்சிகள் இருந்ததால் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டிய சூழல் இருந்தது.
இதனால் அவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம், இதுதான் எடையிழப்புக்கு காரணம், வேறு எதுவும் கிடையாது” என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மனைவியின் எடை இழப்பிற்கும் இந்த நோய் தான் காரணமா? என கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.