ரோபோ சங்கரை திடீரென அடித்த விஷால்! அதிர்ச்சியில் மேடையிலிருந்து இறங்கிய சூரி: வைரல் காட்சி
நடிகர் ரோபோ சங்கரை விஷால் மேடையில் வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஷால்
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி படத்தின் பிரமாண்ட டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை வினோத் குமார் இயக்க, ராணா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணாவும், நந்தாவும் தயாரிக்கிறார்கள்.
அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இதனை ரோபோ சங்கர் தொகுத்து வழங்கினார்.
திடீரென அடித்த விஷால்
இந்நிலையில் பேசிக்கொண்டிருந்த ரோபோ சங்கரை திடீரென விஷால் தாக்கியுள்ளார். அருகில் நின்று இதனை அவதானித்த சூரி செய்வதரியாது கீழே இறங்கினார்.
அப்பொழுது தான் அவர் விளையாட்டிற்கு இதனை செய்ததாகவும், இவர்கள் மூன்று பேரும் இவ்வாறு அடிக்கடி அடித்து விளையாடுவதாகவம் கூறியுள்ளார்.