உங்க குழந்தை ரொம்ப குண்டா இருக்கா? அப்போ இந்த பிரச்சனை வராமல் பார்த்துக்கோங்க
தவறான உணவு பழக்கங்கள் மற்றும் முறையற்ற வாழ்க்கை முறை காரணமாக உடல் பருமன் பிரச்சினைகள் அதிகமாகி வருகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் குழந்தைகளின் உடல்பருமன் கணிசமாக அதிகரித்து வருகிறது.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், மூட்டு வலி போன்ற உடல்நல பிரச்சினைகளுடன் மன அழுத்தம், தாழ்வான மன உறுதி போன்ற உளவியல் பிரச்சினைகளுக்கும் இது முக்கிய காரணமாக அமைகிறது.
“உடல்பருமன்” பிரச்சினையை எளிதில் அடையாளம் காணக்கூடிய ஒரு நிலையாக இருந்தாலும், அதை குணப்படுத்துவது மிகவும் சவாலானது விடயம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அந்த வகையில், உடல் பருமன் பிரச்சினையால் அவஸ்தைப்படுபவர்கள் என்னென்ன பிரச்சினைகளுக்கு முகங் கொடுப்பார்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
குழந்தைப் பருவ உடல்பருமன்
“குழந்தைப் பருவ உடல்பருமன்” என்பது ஒரு குழந்தையின் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்திருக்கும் ஒரு கடுமையான உடல்நலப் பிரச்சினையாகும். அதிக எடை, தான் குழந்தைப் பருவத்திலேயே பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
வளர்ந்த பிறகும் உடல்பருமன், இதய நோய்கள் மற்றும் பிற நீண்டகால உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தும். சில குழந்தைகள் உயரமாக வளர்ந்த பின்னர் எடை குறையும். ஆனால் தொடர்ந்து எடை அதிகரித்து கொண்டிருந்தால் உரிய மருத்துவரை அணுக வேண்டும்.
உடல்பருமனுக்கான காரணங்கள்
1. தவறான உணவு பழக்கங்கள் தான் உடல் பருமனின் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குழந்தைகள் கேட்கும் உணவுகளை அவர்களுக்கு வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
2. சில குழந்தைகளின் உடல் செயல்பாடுகள் குறைவாக இருக்கும். அவர்களால் நகரக் கூட முடியாத நிலை இருக்கும். இதனால் கூட உடல் பருமன் ஏற்படும்.
3. மரபணு மற்றும் ஹார்மோன் காரணிகளால் உடல் பருமன் அதிகரிக்கும். ஏனெனின் பரம்பரையில் யாருக்காவது உடல் பருமன் அதிகரிப்பு பிரச்சினை இருந்தால் அது, அந்த பரம்பரையில் வரும் குழந்தைகளுக்கு இருக்கலாம்.
4. மன அழுத்தம் மற்றும் சமூக பொருளாதார காரணிகளால் கூட உடல் பருமன் ஏற்படும். குழந்தைகளுக்கு மன அழுத்தம் பிரச்சினை இருக்கிறதா? என்பதனை பெற்றோர்கள் பரிசோதிப்பது அவசியம்.
பாதிப்புகள்
- உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- உடல் பருமனால் நடக்க முடியாமல் இருப்பவர்களுக்கு மூட்டு வலி ஏற்படலாம்.
- டைப் 2 நீரிழிவு நோய் வர வாய்ப்பு உள்ளது.
- குழந்தைகளுக்கு அதிக உடல் பருமன் ஏற்படும் பொழுது தூக்கத்தில் மூச்சுத் திணறல் (Sleep Apnea) ஏற்படும். இதனால் கொஞ்சம் சாய்ந்து படுக்க வைப்பது நல்லது.
- கொழுப்பு நிறைந்த கல்லீரல் (Fatty Liver) நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
- உயர் கொலஸ்ட்ரால் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. எனவே முடிந்தவரை உடலை அளவான எடையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |