கேரளா ஸ்டைலில் முருங்கைக்கீரை தோரன்.. ஒருமுறை இப்படி செய்து சாப்பிடுங்க
கேரளாவில் செய்யப்படும் முருங்கக்கீரை தோரன் அதே ருசியில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முருங்கைக்கீரை
உடலுக்கு சத்துக்களை அள்ளித்தரும் கீரைகளில் ஒன்று தான் முருங்கை ஆகும். முருங்கையில், இலை, பூ, காய் அனைத்தும் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.
வாரத்திற்கு ஒருமுறையாவது முருங்கைக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால், ரத்த சோகை நீங்குவதுடன், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
அந்த வகையில் கேரள மக்கள் செய்து அசத்தும் முருங்கைக்கீரை தோரன் எவ்வாறு அதே ஸ்டைலில் சமைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
முருங்கை இலைகள்
- 2 கப்
சின்ன வெங்காயம்
- 10
கடுகு
-1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய்
- 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை
- 1 கொத்து
உப்பு - தேவையான அளவு

அரைக்க
தேங்காய்
- 1 கப்
வர மிளகாய்
-2
பூண்டு பல்
- 5
மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 4

செய்முறை
மிக்ஸி ஒன்றில் துருவிய தேங்காய், வர மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக வைக்கவும்.
கடாய் ஒன்றில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு தாளித்து, சின்னவெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் முருங்கை இலையினை சேர்த்து ஒரு 10 நிமிடம் வரை வதக்கவும். கீரை சற்று சுருண்டு வதங்கியதும், உப்பு சேர்ந்து நன்றாக கிளறவும்.

பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்க்கவும். அவ்வப்போது 5 முதல் 10 நிமிடங்கள் வரை நன்றாக கிளறிவிட வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை சென்றதும் அடுப்பை அணைக்கவும்.
அவ்வளவு தான் சுவையான மற்றும் சத்தான முருங்கைக்கீரை தோரன் கேரளா ஸ்டைலில் தயார். இதனை சாதத்தில் போட்டோ அல்லது பொரியலாகவே வைத்து சாப்பிடலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |