இந்த பிரச்சினையுள்ளவர்கள் மறந்தும் கொய்யாப்பழம் சாப்பிடாதீங்க: ஆபத்து
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பழமாக கொய்யாப்பழம் பார்க்கப்படுகிறது.
கோடைக்காலங்களில் கொய்யாப்பழங்களை சந்தையில் அதிகமாக காணலாம். அதே போன்று மாம்பழங்களும் இந்த பருவகாலங்களில் அதிகமாக வளரும்.
கொய்யா பழம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல வகையில் ஆரோக்கியம் என்றாலும் இதை அளவாகவே சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றார்கள்.
அதிகமாக கொய்யாப் பழம் சாப்பிடுவதால் உடலில் சில பிரச்சனைகள் உருவாக வாய்ப்புள்ளது.
அந்த வகையில், யாரெல்லாம் கொய்யாப்பழம் அளவாக சாப்பிட வேண்டும். அப்படி மீறினால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
1. செரிமான பாதிப்பு உள்ளவர்கள்
இன்று நிலவி வரும் சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறையால் செரிமானப் பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கொய்யாப்பழம் அதிகமாக சாப்பிடும் பொழுது அவர்களுக்கு செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது.
அதிலும் குறிப்பாக கொய்யாவில் “ஃபுருக்டோஸ்” என்ற ஒரு வகையான சர்க்கரை உள்ளது. இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பொழுது வயிற்றில் உப்புசம், மலம் கழிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
2. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ நினைப்பவர்கள் சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்க வேண்டும். இயற்கையான முறையில் உடலுக்குள் செல்லும் சர்க்கரை எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. கொய்யாவில் இருக்கும் சர்க்கரை சில சமயங்களில் உடலுக்கு விளைவுகளை ஏற்படுத்தலாம்.
3. எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி
கொய்யா சாப்பிட்டதும் வயிற்றுப் பிரச்சனை அதிகரிப்பது போன்று தெரிந்தால் கொய்யா பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிகமாக சாப்பிடும் பலருக்கும் வயிற்றுப்போக்கு அல்லது எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி பிரச்சனை ஏற்படும். ஏனெனின் கொய்யாவில் இருக்கும் விதைகளை எளிதாக ஜீரணிக்க முடியாது.
4. பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்
கொய்யாவில் உள்ள தண்ணீர் மற்றும் மண் காரணமாக ஈ.கோலி மற்றும் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் வளர வாய்ப்பு உள்ளது. இதனை வெளியில் இருந்து பார்க்கும் பொழுது எவ்வளவு கடினமாக இருக்கிறதோ, அதனை தாண்டியும் பாக்டீரியாக்கள் உள்ளே சென்று விடுகிறது.
5. தோல் அரிப்பு பிரச்சினையுள்ளவர்கள்
உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு சரும ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். சரும பராமரிப்பிற்கு பல இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும் பொழுது தோலில் அரிப்பு பிரச்சினை இருந்தால் கொய்யா இலைகளை பயன்படுத்தினால் அது வீக்கத்தை அதிகப்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
